பொங்கல் பண்டிகையின் போது ஊரில் பெரிய திருவிழா நடக்கும். அப்போ கபடிப் போட்டி தான் பிரதானமா இருக்கும். எங்க ஊர் கபடிப் போட்டி ரொம்பவே பிரபலமானது. நீண்ட தூரங்களில் இருந்தெலலம் அணிகள் வரும். எங்க ஊர்லையே 3 அணிகள் இருக்கும். பொங்கல் பண்டிகைக்கு சில மாதங்கள் முன்பே பள்ளி மைதானத்தை உழுது விளையாடுவதற்கு ஏற்ற வகையில் மாற்றிவிடுவோம். தினமும் இரவில் கபடி விளையாடுவோம்.
பள்ளிக்கூட வகுப்புகள் 3 மணிக்கு முடிந்துவிடும். பின்னர் 4 மணி வரை அனைவரும் விளையாடியே ஆகனும். அதிலும் பசங்களுக்கு கபடி தான் பிரதானம். மற்றவை அதற்கடுத்து தான். தினம் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது கபடி விளையாடுவோம். கபடியை விட கிட்டிப் புல்( கில்லி ) தான் எங்களின் மிகப் படித்தமான விளையாட்டு. அது தான் கிராமத்து கிரிக்கெட்.
இவை இரண்டிற்கும் அடுத்ததாக எங்களுக்கு பிடித்த விளையாட்டு கால்பந்தாட்டம். பசிக்கும் வரையில் இரவின் தெரு விளக்கொளியில் விளையாடிக் கொண்டே இருப்போம். எலுமிச்சை, சாத்துக்குடி காய்கள் கூட எங்கள் கால்பந்தாட்ட தீணிக்கு தப்பியதில்லை. நகங்களும் பெரு விரலும் அவ்வப்போது மண்ணுக்கு ரத்த முத்தங்களை வாரி வழங்கும். மண்ணை சிறு குவியலாக்கி அதன் பந்தை வைத்து “கிக்” அடித்துப் பழகுவோம். பல சமயங்களில் எதிரில் இருப்பவர்களின் வாய், கண், மூக்கு என மண்ணாபிஷேகம் செய்வதுண்டு.
6 & 7ஆம் வகுப்புப் படித்த பள்ளியில் விளையாட்டுக்கு தடா. பின்னர் 8ஆம் வகுப்பு படிக்கும் போது என் கபடி மற்றும் கால்பந்தாட்ட ஆர்வத்துக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. 10ஆம் வகுப்பு முடியும் வரை பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் கபடியில் சில பல பரிசுகள் வாங்கினாலும் கால்பந்தாட்டத்தின் A க்ளாசுக்கும் B க்ளாசுக்கும் வாரம் 3 முறை PT பீரியடில் நடக்கும் போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. ஆனால் அப்போ தான் முறையாக கற்றுக் கொள்ள முடிந்தது. ஓரளவு உயரமாக இருந்ததால் சுமாரான கோல் கீப்பராகவும் இருந்தேன்.
என் அழிச்சாட்டியங்கள் அதிகமாவதாகவும் தேற மாட்டேன் என்றும் தொடந்து வந்த புகார்களால் மேல்நிலைப் படிப்புக்கு ஒரு தனியார் பள்ளியில் திணிக்கப் பட்டேன். அது ரொம்ப கண்டிப்பான பள்ளி என்ற பெயரெடுத்த பள்ளி. விஷயம் என்னன்னா கல்லூரியை விட அதிகம் எஞ்சாய் பண்ணது அந்தப் பள்ளியில் தான். அதுவரையிலான பள்ளியின் வரலாற்றில் எங்கள் பேட்ச்சில் தான் 12ஆம் வகுப்பில் ஒரு பய பெயிலானான். அவ்வளவு அராஜக பேட்ச் எங்களோடது. அந்தப் பள்ளியில் படிக்கும் போது கபடி விளையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதற்கு அங்கே முக்கியத்துவம் தரவில்லை. அது ஒரு முரட்டு விளையாட்டு என்பதால் தனியார் பள்ளியின் சாஃப்டான பசங்களுக்கு அது ஒத்துவருவதில்லை போல.
ஆனால் கால்பந்தாட்டத்திற்கும் கிரிக்கெட்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். எனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியும். அம்புட்டு தான். போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அளவெல்லாம் அதில் சாமர்த்தியம் இல்லை. அதனால் என்ன? அதான் நம்ம கால்பந்தாட்டம் இருக்கே. தினமும் விளையாடுவோம். முதலாண்டில் பள்ளி வளாகத்தோடவே என் கால்பந்தாட்டக் கனவு முடிந்துவிட்டது. ஆனாலும் இறுதி வெளியே சென்று விளையாட ஆண்டில் சில வாய்ப்புகள் கிடைத்தன. நான் பள்ளி அணியில் இடம் பெற்றிருந்தேன். அதன் பின் கல்லூரியிலும் என் கால்பந்தாட்ட கனவு அப்படியே இருந்தது. தீவிர பயிற்சிக்கும் முயற்சிக்கும் பின்னர் கல்லூரி அணியிலும் இடம் பெற்றேன். சேலம் அரசு இஞ்சினியரிங் கல்லூரிக்கு எதிராக விளையாடிய போது வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த 3 மாணவர்களின் ஆட்டம் என்றும் மறக்க முடியாதது. வெறித்தனமாய் ஆடினார்கள்.
ரொம்ப மொக்கை ஆய்டிச்சி.. விட்ரலாம்.. அதாகப் பட்டது எனக்குக் கால்பந்தாட்டத்தில் ஆர்வம் அதிகம். அதன் விருவிருப்பும் வியூகமும் பிரமிக்க வைக்கும். பந்து வேகபாகப் பாஸ் ஆகிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் போது நம் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைத்தாலும் உறைக்காது. எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தாலும் கால்பந்தாட்டத்தை 10 நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.. உடனே அழுத்தம் காணாமல் போய்விடும். தொலைகாட்சிகளில் பழைய ஆட்டங்கள், ஐரோப்பிய க்ளப்களின் மோதல்கள் எல்லாம் மாய்ந்து மாய்ந்து பார்ப்பதுண்டு இப்போதும்.
உலகக் கோப்பை கால்பந்தாட்டங்களை இரவில் கண் விழித்து பார்ப்பது அலாதி பிரியம். இதோ மீண்டும் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. இந்த உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்காவில். ஆனால் இந்த முறை பெரும்பாலான போட்டிகளை நம் தூக்கத்தை கெடுக்காமலே பார்த்து ரசிக்கலாம்.இந்திய நேரப்படி மாலை 5 மணி, 7.30 மணி மற்றும் இரவு 12 மணிக்கு போட்டிகள் நடைபெறுகின்றன. ஜூன் 11ஆம் தேதி ஆரம்பித்து ஜூலை 12ஆம் தேதி வரை ஒரு மாத காலம் அட்டகாசமான கொண்டாட்டமாக இருக்கப் போகிறது. 32 நாடுகளைச் சேர்ந்த 32 அணிகள். முதல் போட்டியில், இந்த உலகக் கோப்பையை நடத்தும் நாடான தென் ஆப்பிரிக்காவும் மெக்சிகோவும் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு அமர்களமாய் ஆரம்பித்து வைக்கின்றன.
வழக்கம் போல் அடிடாஸ் நிறுவனமே இந்த உலகக் கோப்பைக்கும் பந்துகளை தயாரித்திருக்கிறது. பந்தின் பெயர் ”ஜபுலனி( jabulani )”. அனைவருக்கும் சந்தோஷத்தை கொண்டு வருவது என்று இந்த வார்த்தைக்கு எதோ ஒரு மொழியில் அர்த்தமாம். சென்ற உலகக் கோப்பையை வென்ற அணி இத்தாலி. ஃபைனலில் ஃப்ரான்சை வென்றது. ஷகிரா உள்ளிட்ட உலக இசைப் பிரபலங்களின் இன்னிசையுடன் ஆட்டம் ஆரம்பமாகிறது.

21 comments:
உங்க டீம் ஏதுனு சொல்லுங்க அப்பு... அதுக்கு அப்புறம் மத்ததை பேசிக்கலாம் ;)
இந்தியா எப்ப செமிபைனல்ஸ் வருதோ அப்பதான் இந்த மேட்ச் எல்லாம் பாக்கலாம்னு இருக்கேன். :)
தலைப்புல எதுவும் உள்'கோல்' இல்லியே?..;))
/அதுவரையிலான பள்ளியின் வரலாற்றில் எங்கள் பேட்ச்சில் தான் 12ஆம் வகுப்பில் ஒரு பய பெயிலானான்./
அது நீங்க இல்லைதானே!!!
வழக்கம் போல் அடிடாஸ் நிறுவனமே இந்த உலகக் கோப்பைக்கும் பந்துகளை தயாரித்திருக்கிறது. பந்தின் பெயர் ”ஜபுலனி( jabulani )”. அனைவருக்கும் சந்தோஷத்தை கொண்டு வருவது என்று இந்த வார்த்தைக்கு எதோ ஒரு மொழியில் அர்த்தமாம். சென்ற உலகக் கோப்பையை வென்ற அணி இத்தாலி. ஃபைனலில் ஃப்ரான்சை வென்றது. ஷகிரா உள்ளிட்ட உலக இசைப் பிரபலங்களின் இன்னிசையுடன் ஆட்டம் ஆரம்பமாகிறது.
........ செய்தியுடன் பல தகவல்களும் அருமை. Keep Rocking! :-)
ரூல்ஸ் எல்லாம் தெரியாது ஆனாக்க பாக்க பிடிக்கும்
i am junior team captain when i was in 10th standard sanjay....
கலைஞர் எழுதின மாதிரி இருக்கு.. முக்காவாசி சுயபுராணம் கொஞ்சமா உலகக்கோப்பை!! :)
ஆட்டத்துக்கு நான் தயார்..
புலி, இந்தியா கலந்துக்கற வரைக்கும் எல்லாம் நம்ம டீம் தான் :)
அம்மிணி அக்கா, இப்போ இந்தியா 133வது இடத்துல இருக்கு.. முதல் 50 இடத்துக்குள்ள மொதல்ல வரட்டும்.. :)
ரகு, நீங்க எதும் பீதிய கிளப்பாதிங்க பாஸ். வேணும்னா வலையுலக நோட்டரி சென்ஷிகிட்ட ஒரு NOC வாங்கித் தந்துடறேன்..
அருணாக்கா, நோ நோ.. நானெல்லாம் காலேஜ் வந்து கம்பீரமா அரியர்ஸ் வச்சவன்.. ஸ்கூல்ல ஃப்யில் ஆகறதெல்லாம் சின்னப் பசங்க வேலை.. :)
ரொம்ப நன்றி சித்ரா மேடம்.. :)
தாரணி அக்கா, ரொம்ப சந்தோஷம். நன்னா பாருங்கோ.. :)
பரத், பாஸ், நான் FIFAவோட ப்ராண்ட் அம்பாசடர்னு யாரோ உங்க கிட்ட தப்பா சொல்லி இருக்காங்க பாஸ்.. இந்தப் பதிவின் நோக்கம் என் கால்பந்தாட்ட அனுபவத்தை எழுதறது தான்.. போனாப் போகுதுன்னு கொஞ்சம் தகவல்.. அம்புட்டு தான்..
தூக்கம் கெட்டு கால்பந்தாட்டங்களை பார்ப்பதே ஒரு தனி சுகம்.
அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும் அந்த சுகம்.
நல்லதொரு பதிவு. பாராட்டுகள்.
//எங்கள் பேட்ச்சில் தான் 12ஆம் வகுப்பில் ஒரு பய பெயிலானான். அவ்வளவு அராஜக பேட்ச் எங்களோடது. //
அந்த கஸ்மாலம் நீதான் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்!
இப்படிக்கு
பள்ளி நிர்வாகி
இதனால் சகலமானவர்களுக்கும் நீ சொல்லவருவது என்னன்னா? இதே நீ ஆப்பிரிக்காவில் பிறந்திருந்தா இன்னேரம் உலககோப்பை போட்டியில் விளையாடிக்கிட்டு இருந்திருப்ப! என்பதுதானே!
//எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தாலும் கால்பந்தாட்டத்தை 10 நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.. //
எப்பொழுதில் இருந்து இவ்வளோ நல்லவனா ஆன ராசா?
இப்படிக்கு
ஜோதி தியேட்டர் ஆப்ரேட்டர்
// எங்க ஊர் கபடிப் போட்டி ரொம்பவே பிரபலமானது. //
ஆமா ஆமா வெண்ணிலா கபடி குழு படத்தை இவுங்களை பார்த்துதான் எடுத்தாங்க
//எங்க ஊர்லையே 3 அணிகள் இருக்கும்.//
ஒத்துமை இல்லாம ஊர்ல மூனு டீம் வெச்சிக்கிட்டு பேச்சை பாரு!
நிஜமான கால் பந்து செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள http://www.tamilsportsnews.com/
/எங்க ஊர்லையே 3 அணிகள் இருக்கும்.//
கவுண்டமனி ஜோக்குதான் நினைப்பு வருது.. அது ஒரு ஊரு, அதுக்கொரு பேரு.. :))))அதுல மூணூ அணியாம், யாரும் வந்து பார்க்க மாட்டோம்னு ரீலா?
//32 நாடுகளைச் சேர்ந்த 32 அணிகள்.///
அடா அடா என்னா ஒரு புள்ளி விவரம், நான் கூட 32 நாடுகள் விளையாடுது என்கிற பொழுது 65 அணி வந்திருக்குமோன்னு நினைச்சேன்!!!
//தாரணி பிரியா – (June 11, 2010 1:33 PM)
ரூல்ஸ் எல்லாம் தெரியாது ஆனாக்க பாக்க பிடிக்கும்
//
எப்படி? இந்த பொண்ணுங்களுக்கு சமைக்கவே தெரியாம சாப்பிட பிடிக்கும் என்பது மாதிரியா?
டிஸ்கி: இங்கு வரும் கமெண்ட்ஸ் அனைத்துக்கும் சஞ்சைதான் ரெஸ்பான்ஸ் என்பதால், இனி வரபோகும் பெண்ணீய ஆணிய பிரச்சினைகள் அனைத்தையும் சஞ்சுவே டீல் செய்வார்!
//
ரகு, நீங்க எதும் பீதிய கிளப்பாதிங்க பாஸ். வேணும்னா வலையுலக நோட்டரி சென்ஷிகிட்ட ஒரு NOC வாங்கித் தந்துடறேன்.. //
சஞ்சய் ரொம்ப நல்லவருங்க.. வல்லவருங்க.. நாலும் தெரிஞ்சவருங்க.. எல்லாத்துக்கும் மேல என் நண்பருங்க.. :)))
இந்த பதிவு மெய்யாலுமே ஃபுட் பாலைப்பத்தின பதிவுதாங்க....
நல்ல விஷயம் தான் ஷர்புதீன் :)
மஞ்சூர் அண்ணா, அதே அதே.. இந்த உலகக் கோப்பை நெறைய ஆச்சர்யங்களை தருது. நன்றி :)
சுவிட்சர்லாந்து ஸ்பெயினை ஜெயிச்சிருக்கு. நம்ப முடியுதா? :)
நன்றி குசும்பன் மாம்ஸ்
நன்றி மயில்
நன்றி ஷென்ஷி.. உங்க ஃப்ரண்டுன்னு சொல்லிட்டு நல்லவன்னு சொன்னா யார் நம்புவாங்க? :)
Post a Comment