July 31, 2010

தடையில்லா மின்சாரம் சாத்தியமே

நாளை முதல் தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப் படும் என செய்தி வெளியாகி இருக்கிறது.. தமிழகத்தில் மின்சார உபயோகம் அதிகமாவிட்டதால் வெளிமாநிலங்களில் இருந்து அதிக விலையில் மின்சாரம் வாங்கப் படுவதாகவும் மின்வாரியம் பெரும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். தமிழகத்தில், ஆக்கப் பூர்வமாக செயல்படாத ஒரு துறை என்றால் அது மின்சார வாரியம் தான்.. அரசாங்க சாராயக் கடைகள் கூட சாதனை செய்கின்றன. ஆனால் மின்வாரியம் சவம் போல் இருக்கிறது..

தமிழகத்தில் கிடைக்கும் மின்சாரத்தை வைத்தே தடையில்லாமலும் கட்டணம் அதிகரிக்காமலும் மின்சாரம் வழங்க முடியும். இதை போகிற போக்கில் மிக சுலபமாக செயல்படுத்த முடியும்.. இலவச தொலைகாட்சி, குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக்குவது, கேஸ் அடுப்பு என பல ஆயிரம் கோடிகளை அரசாங்கம் செலவிடுகிறது.. இதே போல் வீடுகளில் உபயோபப் படுத்தும் பழைய குண்டு பல்புகளை மாற்றிவிட்டு சிக்கனமாக மின்சாரம் பயன்படுத்தும் CFL பல்புகளை இலவசமாகவோ மானியவிலையிலோ மக்களுக்கு வழங்கினால் பெரும் அளவில் மின்சார உபயோகத்தைக் கட்டுபடுத்த முடியும். இதற்காக விழிப்புணர்வு பிரச்சாரத்தைக் கூட அரசாங்கம் செய்வதில்லை..

தமிழகத்தின் மின் உபயோகத்தில் பெரும் பங்கு விவசாயத்துக்கு உண்டு.. அதுவும் இலவசமாக. இனி எந்த காலத்திலும் விவசாய மின்சாரத்திற்கு கட்டணம் விதிக்க முடியாது. அது நடக்காத காரியம். ஆனால் மின் நுகர்வை குறைக்க முடியும். தற்போது பரவலாக பயன்படுத்தப் படும் மோட்டார்கள் அனைத்தும் அதிக மின்சாரத்தை உறிஞ்சுபவை தான். அதற்கு பதில் ISI சான்றளிக்கப் பட்ட மோட்டார்களைப் பயன்படுத்தினால் மின் உபயோகம் பெரிய அளவில் குறையும். மோட்டார்களின் விலை அதிகம் என்பதால் யாரும் பழைய மோட்டார்களை மாற்ற முன்வருவதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் பழைய மோட்டார்களை மாற்றிவிட்டு ISI முத்திரையுள்ள புதிய மோட்டார்களை வாங்குவதற்கு அரசாங்கம் 50% மானியம் அளிப்பது மிக சொற்பமான விவசாயிகளுக்கேத் தெரியும். 

அதே போல் ISI முத்திரை உள்ள மோட்டார்களின் விலையும் அதிகமாகவே இருக்கிறது. இதனாலும் மக்கள் சாதாரன மோட்டார்களையே வாங்கிவிடுகிறார்கள்.  ISI முத்திரை உள்ள மோட்டார்களையும் குறைவான விலையில் விற்கவைக்க அரசாங்கத்தால் முடியும். ஒரு நிறுவனத்திற்கு ISO வாங்குவது போல் பொதுவாக ஒரே ஒரு ISI லைசன்ஸ் வாங்கிக் கொண்டு பொருள் தயாரிக்க முடியாது.. தயாரிக்கும் ஒவ்வொரு மாடலுக்கும் ISI சான்றிதழ் வாங்க வேண்டும். இதற்காக 30000 ரூபாய் கட்டணம் விதிக்கப் படுகிறது. பெரிய நிறுவனங்களுக்கு இது பெரும் தொகையல்ல.. ஆனால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது பெரும் சுமை.. இதை பாதியாக்கினால் கூட போதும்.. சிறு நிறுவனங்கள் ISI சான்றிதழ் பெரும் வகையிலான தரத்தில் மின்சாரம் குறைவாக பயன்படுத்தும் மோட்டார்களை தயாரிப்பார்கள். விரைவிலேயே 100% ISI தர சான்றிதழுடன் மோட்டார்கள் விற்பனைக்கு வந்துவிடும். பின் தானாகவே மின் உபயோகமும் தற்போதைய அளவிலிருந்து குறைந்துவிடும்.

டிஸ்கி : மாசத்துக்கு ஒரு பதிவு கூட போடலைன்னா என் கூட எல்லாம் யார் சண்டைக்கு வருவாங்க.. :)

19 comments:

சின்ன அம்மிணி said...

வயசான காலத்தில இந்தியாவுக்குதான் வந்து செட்டிலாகலாம்னு இருக்கேன். சீக்கிரம் இதையெல்லாம் சரி பண்ணி வையுங்க

வடகரை வேலன் said...

சின்ன அம்மினி,

வயசான காலத்தைப் பத்தி சஞ்செய்கிட்ட ஏன் பேசுறீங்க?

எறும்பு said...

வெறும் மொக்கை பதிவுகளாக வரும் இடத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பதிவு எழுதும் நீங்கள் ஒரு மாணிக்கம்.
:)

எறும்பு said...

//டிஸ்கி : மாசத்துக்கு ஒரு பதிவு கூட போடலைன்னா என் கூட எல்லாம் யார் சண்டைக்கு வருவாங்க.. :)//

என்ன பண்றது.. பேசாம நீங்க ஒரு புனைவோ சொற்சித்திரமோ எழுதுங்க.. அப்புறம் பாருங்க

சின்ன அம்மிணி said...

@ வடகரைவேலன் - சஞ்சய் அங்கிள்கிட்ட இதையெல்லாம் பேசக்கூடாதோ :)

குசும்பன் said...

//இதை போகிற போக்கில் மிக சுலபமாக செயல்படுத்த முடியும்..///

போகிற போக்கில்™ பிளாக் ஓனரை மந்திரி ஆக்கிடுவோமா மாமா?

குசும்பன் said...

//பின் தானாகவே மின் உபயோகமும் குறைந்துவிடும். இருக்கும் மின்சாரத்தை வைத்து தடையில்லாமல் வழங்க முடியும்.
//

மாமா அதையும் மீறி மீதி இருக்கும் மின்சாரத்தை உனக்கு பின்னாடி சொறுவி வேஸ்ட்டேஜ் ஆகாம பார்த்துக்கலாம்:)))

மங்களூர் சிவா said...

/
//டிஸ்கி : மாசத்துக்கு ஒரு பதிவு கூட போடலைன்னா என் கூட எல்லாம் யார் சண்டைக்கு வருவாங்க.. :)//

என்ன பண்றது.. பேசாம நீங்க ஒரு புனைவோ சொற்சித்திரமோ எழுதுங்க.. அப்புறம் பாருங்க
/

ரிப்பீட்டு!

vimal said...

Awareness post
Super...!

தமிழ் பிரியன் said...

சஞ்சய், இதெல்லாம் நடக்காத காரியம். தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்யாத வரை இதெல்லாம் தீராது. ISI தரமுள்ள மோட்டராக இருந்தாலும் அதனால் தமிழக மின் நுகர்வில் ஏதும் பெரிய மாற்றம் வந்து விடாது. வருடா வருடாம் மின் நுகர்வு அதிகமாகிக் கொண்டே செல்கின்றது. ஆனால் மின் உற்பத்தியில் புதிய திட்டங்களின் பலன் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இது திமுக, அதிமுக இரண்டும் செய்த தவறு தான். அதற்காக வட மாநிலத்தில் பாலும் தேனும் ஓடுவதாக நினைக்க வேண்டாம். இங்கு இரண்டு மணி நேரம் என்றால் அங்கு 4 மணிநேரம் மின்தடை.

அன்புடன் அருணா said...

/அதற்காக வட மாநிலத்தில் பாலும் தேனும் ஓடுவதாக நினைக்க வேண்டாம். இங்கு இரண்டு மணி நேரம் என்றால் அங்கு 4 மணிநேரம் மின்தடை./
ரொம்ப சரி!இங்கு 4 மணிநேரம்லாம் இல்லை!எப்போ போகும் எப்போ வரும்னு சொல்ல முடியாது அவ்வ்ளோதான்!

அன்புடன் அருணா said...

/மாசத்துக்கு ஒரு பதிவு கூட போடலைன்னா என் கூட எல்லாம் யார் சண்டைக்கு வருவாங்க.. :)/
அட!இப்ப என்ன?நான் கேட்கிறேன்! ஏன் இவ்வ்ளோ நாளா பதிவு போடலை!!????

ஜோசப் பால்ராஜ் said...

அப்ப அப்ப ஒரு சமுதாய பதிவும் எழுதுற மாப்பி. இது மிக அருமையான பதிவு.

இன்னும் பல வழிகளில் மின்சார சிக்கனத்தை கொண்டு வரலாம். ஆனாலும் மின் உற்பத்தியையும் அதிகரித்தே ஆகவேண்டும். மின் சக்தியில் இயங்கும் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதால் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கு. இதனால் தேவையும் அதிகாமாகுது. இதனால் வெறும் சிக்கனம் மட்டும் முழு தேவையையும் பூர்த்தி செய்யாது என்றாலும் சிக்கன நடவடிக்கைகள் மிக அத்தியாவசியம்.
இங்க நான் இருக்க நாட்டுல மின் தடை என்பதே இல்லையென்றாலும் அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி தேவையில்லாது எரியும் விளக்குகள், குளிர்சாதனம், மின் விசிறி போன்றவற்றை நிறுத்துவது என் பழக்கம். என் அலுவலகத்தில் இது பலராலும் கவனிக்கப்பட்டு, இன்று எல்லோரும் அதை பின்பற்றுகிறார்கள். சின்ன விசயம் தான். இது போன்ற நடைமுறை பழக்கங்கள் கூட நிறைய மின் சேமிப்பிற்கு உதவும். வீட்ல நாம எல்லாரும் தேவையில்லாத விளக்குகள், மின் விசிறிகள நிறுத்துனாலும் ( நாம பில் கட்றதால) அலுவலகத்துல இதையெல்லாம் பெருசா எடுத்துக்கிறதில்ல. அந்த மனப்பான்மை மாறனும்.

SanjaiGandhi™ said...

@அம்மினி அக்கா
வாங்க வாங்க.. சரி பண்ணிடலாம்.. :)

@அண்ணாச்சி.. நல்லாருங்க :)

@ எறும்பு, நன்றிங்க.. :))

@ குசும்பன், மாம்ஸ்.. ஓனர் இல்லை.. ஓனர்ஸ்.. என் தங்கச்சி என்னை அடிக்க வந்துடுவா :)

@ மங்களூர் மாம்ஸ், லைட்டா திருந்தறது :)

@ தமிழ்பிரியன், புதுசா மின் உற்பத்தியே வேணாம்னு சொல்லலை.. அதுக்கான வேலைகளும் நடப்பதாக தான் அரசாங்கம் சொல்லுது.. ஆனாலும் மின் தடையை தளர்த்த முடியும்னு தோணலை.. ஆனால், சிக்கனத்துக்கான வழிகளை முயற்சித்தால் ஏராளமான மின்சாரத்தை சேமிக்கலாம்.. தடையில்லாமல் வழங்கலாம்..

@ அருணாக்கா, நன்றி.. பிசின்னு சொன்னா நம்ப மாட்டிங்களே :)

@ஜோசப்.. நீ ரொம்ப நல்லவண்டா மச்சி :)

கார்த்திக் said...

தல ISO விட சம்மிர்சல் மோட்டார் பயன்படுத்தி சொட்டுநீர் முறைல பாசன வசதி செய்தா மின்சார செலவும் குறையும் தண்ணியும் மிச்சம் ஆகும் :-))

ஆதிமூலகிருஷ்ணன் said...

துவக்கம் ஓகே. இறுதிப்பாரா அவ்வளவாக விவரம் பத்தாத ஆளால் எழுதப்பட்டிருக்கிறது என்பது பளீர்.

SanjaiGandhi™ said...

ISO இல்ல கார்த்தி.. ISI.. இந்த தரச்சான்றிதழ் வாங்கனும்னா மின்சார சிக்கனம் கடைபிடிக்கும் படியான மோட்டாராக இருக்க வேண்டுமாம்..

ஆதி மாம்ஸ், விவரம் ப்ளீஸ்..
40 ஆண்டுகாலம் பம்ப் தயாரிக்கும் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன தகவல் தான் கடைசி பாரா.. தவறு இருந்தால் திருத்தனும்.. பரிசல் மாதிரி பேசக் கூடாது.. :)

SanjaiGandhi™ said...

//இருக்கும் மின்சாரத்தை வைத்து தடையில்லாமல் வழங்க முடியும்.//

இந்த வரியை நீக்கிடறேன்.. 2வது முறை படிக்கும் போது தான் தவறு புரிகிறது. :)

?!!!@#%* said...

http://www.wnd.com/?pageId=45407
சஞ்சய் மேல உள்ள லிங்க பாருங்க !!

1. சிஎஃப்எல் பல்ப்ல மெர்க்குரி அதிகம் உடைஞ்சா 10 நிமிஷத்துல இடத்த காலி பண்ணனும்

2. வெக்குவம் கிளீனர் உபயோகிக்கக்கூடாது

3.உடைந்த துகள்கள் அலெர்ஜி உண்டாக்கும் சில சமயம் மூலைக்கே ஆபத்து

4. நம்மோரூ ஆளுங்களா அதை குப்பை தொட்டில போட்டு உடைப்பாங்க !!!

5. இதை யாரும் சொல்றது கிடயாது !

நன்றி
சஹ்ரிதயன்

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget