August 3, 2010

ஆடிப் பெருக்கு விழா வாழ்த்துகள்

ஊர்ல இருக்கும் போது ஆடி பதினெட்டெல்லாம் நமக்கு ரொம்ப ஸ்பெஷல். அன்னைக்கு குளிச்சே ஆகனும் என்பது தான் கொஞ்சம் கஷ்டம். 10, 11 மணிக்கெல்லாம் ஊரை காலிப்பண்ணிடுவோம்.. 3 ஊர்களுக்கு செல்வது வாடிக்கை.. தீர்த்தமலை, அனுமந்தீர்த்தம் மற்றும் ஒகேனக்கல். எனக்குப் பிடிச்சது ஒகேனக்கல் தான். மதிய சாப்பாடு அங்க சாப்டற மாதிரி கிளம்பிடுவோம். ஒகேனக்கல் போய் சேர்ந்ததும் பெண்கள் எல்லாம் அவங்க வேலையை பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. கையோடு எடுத்து செல்லும் பண்ட பாத்திரங்கள் கொண்டு சமையல் வேலை ஆரம்பிச்சிடுவாங்க..

 ஆண்கள் எல்லாம் எண்ணெய் தேச்சிக்க கிளம்பிடுவோம். ஒகெனக்கல்லில் ஆயில் மசாஜ் ரொம்ப பிரபலம். மனசாட்சியே இல்லாம ஒடம்பு முழுக்க எண்ணெய் விட்டு அடி பின்னி எடுப்பாங்க..அதே வலியோட அப்டியே அருவியில நின்னா.. அட அட.. ஒடம்புல இருந்த ஒட்டு மொத்த வலியும் அப்டியே ஓடிப் போய்டும்.. தண்ணில ஆட்டம் போட்டுட்டு வந்தா பயங்கரமா பசிக்கும்.. சமையலும் தயாரா இருக்கும். செம கட்டு தான்..

அப்டியே சாயங்காலம் வீட்டுக்கு வந்துதும் ஒரு கும்பல் சேர்ந்துடும்.. ஆளுக்கொரு தேங்காய் எடுத்துட்டு அதோட தோல் நீக்கிட்டு சின்னதா ஒரு ஓட்டைப் போட்டு தேங்காய் தண்ணியை வெளியேறிட்டு அதுல , ஊறவச்ச அரிசி, கொள்ளுப்பருப்பு , கொஞ்சம் வெல்லம் எல்லாம் ஃபுல்லா நிரப்பிடுவோம். அந்த தேங்காய்ல ஒரு நீளமான கொம்பு சொருகி வட்டமா உட்கார்ந்து நெருப்புல தேங்காயைச் சுடுவோம்.. நல்லா சூடேறினதும் வெடிக்க ஆரம்பிக்கும். அதை கொஞ்சம் ஆறவச்சி சாப்ட்டா.. ஆஹா..

ஹ்ம்ம்.. இப்போ அதெல்லாம் ஒரு பதிவெழுதி முடிச்சிக்க வேண்டியதா இருக்கு.. எல்லாருக்கு ஆடிபெருக்கு விழா வாழ்த்துகள்..

12 comments:

Chitra said...

அடியே சாயங்காலம் வீட்டுக்கு வந்துதும் ஒரு கும்பல் சேர்ந்துடும்.. ஆளுக்கொரு தேங்காய் எடுத்துட்டு அதோட தோல் நீக்கிட்டு சின்னதா ஒரு ஓட்டைப் போட்டு தேங்காய் தண்ணியை வெளியேறிட்டு அதுல , ஊறவச்ச அரிசி, கொள்ளுப்பருப்பு , கொஞ்சம் வெல்லம் எல்லாம் ஃபுல்லா நிரப்பிடுவோம். அந்த தேங்காய்ல ஒரு நீளமான கொம்பு சொருகி வட்டமா உட்கார்ந்து நெருப்புல தேங்காயைச் சுடுவோம்.. நல்லா சூடேறினதும் வெடிக்க ஆரம்பிக்கும். அதை கொஞ்சம் ஆறவச்சி சாப்ட்டா.. ஆஹா..



.......வாசிக்கும் போதே, நாவில் நீர் ஊறுதே.....

sakthi said...

ஆடிபெருக்கு விழா வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

ம்.. மலரும் நினைவுகள்... சுகமான நினைவுகள்...

ஆடி பெருக்குங்கு.. புது சினிமா தொலைக்காட்சியில் போடுவாங்க... அதைப் பார்த்து சந்தோஷப் பட்டுகுங்க

செந்தழல் ரவி said...

ஒரே வட்டம் வட்டமா தெரியுதுப்பா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்.. தோடு பாசி வளையல் புதுசா வாங்கி போட்டுக்கிட்டு ஆத்துக்கு போய் பூஜை செய்வோம்.. எல்லாம் ஒரு காலம்.. :)

அமைதிச்சாரல் said...

//அப்டியே சாயங்காலம் வீட்டுக்கு வந்துதும் ஒரு கும்பல் சேர்ந்துடும்.. ஆளுக்கொரு தேங்காய் எடுத்துட்டு அதோட தோல் நீக்கிட்டு சின்னதா ஒரு ஓட்டைப் போட்டு தேங்காய் தண்ணியை வெளியேறிட்டு அதுல , ஊறவச்ச அரிசி, கொள்ளுப்பருப்பு , கொஞ்சம் வெல்லம் எல்லாம் ஃபுல்லா நிரப்பிடுவோம். அந்த தேங்காய்ல ஒரு நீளமான கொம்பு சொருகி வட்டமா உட்கார்ந்து நெருப்புல தேங்காயைச் சுடுவோம்.. நல்லா சூடேறினதும் வெடிக்க ஆரம்பிக்கும். அதை கொஞ்சம் ஆறவச்சி சாப்ட்டா.. ஆஹா..//

ஆஹா.. வெடிதேங்காய் :-))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சரி.. சரி.. இன்னிக்காச்சும் குளிச்சியா இல்லையா..?

Mitr Friend - Bhushavali said...

Hey Happy Aadi 18!!!
Hogenakkal Massage - Sounds so amazing!!!

A visit to India Gate at night
A Stroll at the Bhudha Jayanthi Park

கலகலப்ரியா said...

அவ்வ்வ்வ்... இப்டி வெறுப்பேத்தறதே வேலையா அலையுறாங்களே...

||உண்மைத் தமிழன்(15270788164745573644) – (August 3, 2010 3:28 PM)
சரி.. சரி.. இன்னிக்காச்சும் குளிச்சியா இல்லையா..?||

இத நான் கேக்கலாம்ன்னு நினைச்சேன்... நீங்க கேட்டுட்டீங்க... பதிவு எழுதி குளிக்கிற வேலையும் முடிச்சாச்சு போல...

சின்ன அம்மிணி said...

நொய்யல்ல தண்ணி வந்துச்சா

sweatha said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

sweatha said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget