நிறம் : சிகப்பு
( செவப்பா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்களாம் )
ஜாதகம் : சுத்தஜாதகம்
( தினமும் குளிக்க வச்சிருக்கனுமாம்)
மாத வருமானம் : 5 லட்சத்திற்கு மேல
( பொண்ணு தினமும் காலைல டீயும் தங்க பிஸ்கட்டும் தான் சாப்டுமாம் )
தொழில் : விவசாயம் & வியாபாரம்
( கூகுள் CEOக்கு எல்லாம் பொண்ணு தர மாட்டாங்களாம் )
பொருந்தும் நட்சத்திரம் : கார்த்திகை. பூசம், சுவாதி.. இத்யாதி
(வால்நட்சத்திரம் , அக்னி நட்சத்திரம், சினிமா/டிவி நட்சத்திரம் எல்லாம் பொருத்தமில்லையாம் )
எடை: 60 முதல் 75 கிலோ
( தினமும் பொண்ணை தூக்கிட்டு 5 கிமீ வாக்கிங் போகனுமாம்)
படிப்பு : IAS/IFS/IPS/IRS/BE, MBA/ MBBS, MS
( இதெல்லாம் படிச்சிட்டும் வெவசாயமும் வேபாரமும் பண்ணனுமாம்.. அப்புறம் இந்த ஐநா சபை செயலாளர், உலக வங்கி தலைவர் எல்லாம் வேஸ்டாம்.. வருமானம் இருக்காதாம்..)
உயரம் : 180 செமீ
( ஆளு ஒசரமா இருந்தா வாசப்படியும் ஒசரமா இருக்குமாம்.. ஊடும் பெரிசா இருக்குமாம் )
தினமலரின் முதல் பக்கத்தில் கலர் விளம்பரம் குடுத்து எளிமையான முறையில் வரன் தேர்ந்தெடுக்க அனுகவும் கொங்குதிருமணம் டாட்டு காம்..
விளம்பரப் படம் : தினமலர்

25 comments:
ஓய், என்ன சொல்றே நீ, ரொம்ப பிஸியா
ஆகா...
உங்க ஜாதகம் அனுப்புங்க ஆபிசர். எல்லாம் மேட்ச் ஆகுது,,உங்க சார்பா நான் வேணா அனுப்பவா?
மாசம் 5 லட்சமா? அவ்வ்வ் துபாயில் வருடம் முழுக்கவும் ஒட்டகம் மேச்சும் அம்புட்டு வருவது இல்லையே மாமா!:(((
அப்ப எனக்கு எல்லாம் கல்யாணம் நடக்கவே நடக்காதா?:))))
மாமா விளம்பரத்தில் இருக்கிற பொண்ணுமாதிரி ஏதும் கிடைக்கும் என்றால் பேங்கில் கொள்ளை அடிச்சு மாசம் வருமானத்தை அதிகம் ஆக்கிட்டலாம்:))
// அதிகம் ஆக்கிட்டலாம்:))
// ஆக்கிட்டு??
கொங்குவேளாளக்கவுண்டரில் சின்னக்கவுண்டரும் அடக்கமா???
:D
:))
உண்மையாக இந்த விளம்பரம் வந்ததா?
அப்ப எனக்கு எல்லாம் கல்யாணம் நடக்கவே நடக்காதா?:)))//
குசும்பு நடக்கும் ஆனா நடக்காது :))
எனக்கென்னமோ சஞ்சய மனசில வச்சு வெளம்பரம் கொடுத்த மாதர தோனுது
இம்புட்டு செலவு பண்ணி கொடுத்த விளம்பரத்தை பார்த்துட்டு,"எப்படியும் ஒரு அடிமை கூடவா சிக்காம போயிரும்,"
அந்த தியாகிக்கு இப்பவே என் ஆழ்ந்த அனுதாபங்கள்
இதுக்காகவே உக்காந்து
யோசிப்பீங்களோ !
இது என்ன அதிசயம். ஈரோட்டுக்காரங்க கிட்ட கேளுங்க.
111 ம்பாங்க.
1லட்சம்
1 கிலோ பவுன்
1 கார்
இது 15 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ற பொண்ணு வீட்டுக்காரங்க குடுக்க வேண்டிய வரதட்சணை.
ஐய்யய்யோ!!!!
உம்ம தற்பெருமைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.
:))
பணம் சம்பாதிக்கலாம் வாங்க கூகிள் வழியா
Free Google Adsense Training In coimbaotre Tamilnadu India
Free Web Design Training In coimbaotre Tamilnadu India
Free SEO Training In coimbaotre Tamilnadu India
அடுத்த தலைமுறை பசங்களுக்கு பொண்ணே கிடைக்காது போலயே!
:))!
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... சிரிச்சு முடியல!
ஐய்யோ பாவம் சஞ்சய்.... இதும் போச்சா... அவ்வ்வ்..
கலகலப்ரியா
//ஐய்யோ பாவம் சஞ்சய்.... இதும் போச்சா... அவ்வ்வ்..//
சத்தம் மட்டும் அவ்வ். நிஜத்துல =)). அப்புடித்தானே:))))))
வலைச்சர வாரத்தில் உங்கள் தளம் குறித்த பார்வை நேற்றைய பகிர்வில்...
படிக்க... http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_20.html
நட்புடன்
சே.குமார்
Http://vayalaan.blogspot.com
அட்டகாசம் ஓய்...!
Post a Comment