August 30, 2010

போங்கய்யா நீங்களும் உங்க ம** புடுங்கற மனித உரிமையும்

கிருஷ்ணகிரி அருகில் உள்ள பையூர் விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு கோவையில் இருந்து இரண்டு பேருந்துகள் கிளம்புகின்றன. ஒன்றின் மாணவர்களும் இன்னொன்றில் மாணவிகளும். அவர்கள் அனைவரும் கோவை விவசாயப் பல்கலைகழக மாணவர்கள். கல்விச் சுற்றுலாவுக்கான பயணம். ஆடிப்பாடி அரட்டையடித்து சந்தோஷமாக சில நூறு கிலோமீட்டர்களைக் கடந்து தருமபுரி நகரம் வந்தடைகிறார்கள். அங்கிருந்து மாணவர்களின் பேருந்து முன்னதாகவும் மாணவிகள் பேருந்து அதைத் தொடர்ந்தும் பையூருக்கு பயணம் தொடர்கிறது.  அடுத்த நாள் அவர்கள் பல புதிய ஆராய்ச்சிகளை காணப் போகிறார்கள். அது அவர்களின் வாழ்க்கையை மாற்றியும் அமைக்கலாம். இன்னும் தருமபுரி ஆட்சியர் அலுவலகம் கூட வந்து சேர்ந்திருக்கவில்லை. நகரின் மையப்பகுதி..

 அவர்கள் மட்டுமின்றி யாருமே எதிர்பாராத வகையில் ஒரு கொலைவெறி கும்பல் அவர்களை மறிக்கிறது. பேருந்தின் அனைத்து பக்கமும் கற்கள் வீசப் படுகின்றன. கல்வீச்சில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மாணவிகள் ஜன்னல் திரைகளை மூடுகிறார்கள். அது தான் அவர்களுக்கு பெரும் ஆபத்து என்பது அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. பேருந்தை மறிந்த அந்த மிருகங்கள் பேருந்தின் மீது பெட்ரோலை ஊற்றுகின்றன. சில மிருகங்கள் தீயை கொளுத்துகிறார்கள். பேருந்து கொளுந்துவிட்டு எரிகிறது. உள்ளே மாணவிகள் அலறல். ஜன்னல் வழியே தப்பிக்கலாம் என்றால் தொடர்ந்த கல்வீச்சு. பிணம் திண்ணி கழுகுகளின் ஆட்டம் அடங்கவேயில்லை. வெகு விரைவில் பேருந்து முழுதும் தீ பரவிவிட்டது. யாராலும் வெளியேற முடியவிலை.

எதேச்சையாய் அதை கவனித்த மாணவர்கள் தங்கள் பேருந்தை நிறுத்திவிட்டு ஓடிவருகிறார்கள். இந்த பிணம் திண்ணி நாய்கள் தப்பி ஓடுகின்றன. மாணவர்கள் எரியும் பேருந்தின் கண்ணாடிகளை உடைக்கிறார்கள். அதன் வழியே மாணவிகளை வெளியே இழுத்துப் போடுகிறார்கள். அனைவருக்கும் தீக்காயங்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மாணவிகள் ஒருபுறம். தீக்காயங்களுடன் வெளியேறி, உள்ளே இருக்கும் உங்கள் உயிர்த்தோழிகளை மாணவர்களுடன் சேர்ந்து மீட்கப் போராடுவது இன்னொருபுறம். ஒருவழியாய் அனைவரும் வெளியேறிவிட்டார்கள் என மூச்சுவிட்டுக் கொண்டிருந்த போது திடீர் பரபரப்பு மாணவிகளிடம்.. எங்கே ஹேமலதா? எங்கே காயத்ரி? எங்கே கோகிலவாணி?

வகுப்புக்குப் போகாமல் மரங்களடியில் அமர்ந்து ஜாலியாய் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறோம். டேய் மச்சான், பாரதிபுரத்த்துகிட்ட யாரோ காலேஜ் பசங்க பஸ்ஸை கொளுத்திட்டாங்களாம்டா.. என்று யாரோ ஒரு மாச்சான் கத்தினான். மற்றவர்களுக்கும் தகவல் சொல்ல சொல்லிவிட்டு அங்கிருந்த சிலர் மட்டும் உடனே ஓடத்துவங்குகிறோம். அப்போது எல்லோருமே பேருந்துகளில் தான் கல்லூரி வருவோம். யாரிடமும் வாகனங்கள் இல்லை. அல்லது இருப்பவரைத் தேடிக் கொண்டிருக்க மன்மோ நேரமோ இல்லை. கல்லூரியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் சற்று கூடுதலான தூரத்தை அடைய ஓடிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு பேருந்து முற்றிலும் எரிந்து எலும்புக் கூடாய் இருந்தது. எங்கும் மரண ஓலம். முகத்தில் உயிர் பயம். தேவைப் பட்ட உதவிகளை செய்துவிட்டு சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்த போது என் நண்பன் ஒருவனைப் பார்த்தேன். என் பள்ளித் தோழன். டேய் , நீ என்னடா பண்ற இங்க? என்று கேட்டது தான் தாமதம். மச்சான், அரைமணி நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் எங்கக்கூட இருந்து என் ஃப்ரண்ட்ஸ் இப்போ எங்கள விட்டுப் போய்ட்டாங்கடா.. பயணம் செய்த மாணவர்களில் அவனும் ஒருவன். அங்கிருந்தவர்கள் முகத்தில் உயிர் பயத்தை மட்டும் பார்த்த என் நண்பர்களுக்கு உயிர்பலி அப்போது தான் புரிந்தது. அவன் பார்வை சென்ற திசை நோக்கி பீதியுடன் போய் பார்த்தேன். பேருந்தின் பின் நுழைவாயில். கதவு சாத்தி இருந்தது. மெதுவாக எட்டிப் பார்த்தேன். அது என் வாழ்வில் மறக்கவே முடியாத காட்சியாக இருக்கும் என அந்த நொடி வரை தெரியவில்லை. மூன்று மாணவிகள் ஒருவர் மீது ஒருவர் தீக்கு இரையாகிக் கிடந்தார்கள்.

தருமபுரி நகரத்தில் அதிமுகவில் பல அணிகள் இருந்தாலும் பெரும் அணிகள் இரண்டு உண்டு. SR வெற்றிவேல் (இவர் தந்தையை ரவுடி ரங்கன் என்பார்கள் , சமீபத்தில் நடந்த? உட்கட்சித் தேர்தலில் எதிரணி வேட்பாளரை தேர்தல் அலுவலகம் முன்பே வெட்டிக் கொன்றதாக கைது செய்யப் பட்டார் வெற்றிவேல் .) தலைமையில் ஒரு அணி. மிஸ்டர் எக்ஸ்( வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.. எனவே பெயர் தேவையில்லை )  தலைமையில் மற்றொரு அணி. வெற்றிவேல் வளர்ச்சி ஏறுமுகமாக இருந்தது. மிஸ்டர் எக்ஸ் ஒதுக்கிவைக்கப் பட்டிருந்தார். மீண்டும் தன் விசுவாசத்தைக் காட்ட சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்தவருக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வருகிறது. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் துள்ளிக்குதித்த மிஸ்டர் எக்ஸ் தன் அல்லக்கைகளை ஏவி விடுகிறார். அந்தக் கூலிப்படை தன் வெறியாட்டங்களை நிகழ்த்த சிக்கியவர்கள் தான் இந்த அப்பாவி மாணவர்கள்.

குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்கிறார்கள். செஷன்ஸ் நீதிமன்றத்தில் சிலருக்கு ஆயுள் தண்டனையும் சிலருக்கு மரண தண்டனையும் விதிக்கப் படுகிறது. வழக்கு பேல் முறையீட்டுக்காக சென்னை உயர்நீதிமன்றம் செல்கிறது. மூன்று பேரின் மரண தண்டனைகள் உறுதி செய்யப் படுகிறது. மற்றவர்களின் தண்டனைகளில் சில மாற்றங்கள். பின்னர் வழக்கு உச்ச நீதி மன்றத்துக்கு செல்கிறது. இப்போது உச்ச நீதி மன்றமும் இவர்களுக்கு மரண தண்டனையை உறுதிப் படுத்துகிறது.

இந்த மிருகங்களுக்கான இந்த தண்டனையை மகிழ்ச்சியுடன் வரவேற்க்கிறேன். அன்று இவர்கள் எங்கள் கையில் கிடைத்திருந்தால் நாங்களே கொன்றிருந்தாலும் கொன்றிருப்போம். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது நல்ல தீர்ப்பு வந்ததே. ஆனால் சாக வேண்டியவர்கள் இந்த மூவர் மட்டுமே இல்லை. இன்னும் சில பிணந்திண்ணிகள் தப்பிவிட்டன.

வழக்கம் போல் மனித உரிமை ஆர்வலர்கள் கூவ ஆரம்பித்து விட்டார்கள். எனக்குத் தெரிந்தவரையில் இவர்கள் பேர் தான் மனித உரிமை ஆர்வலர்கள். உண்மையில் மிருக ஆதரவு விளம்பரப் பிரியர்கள். மரண தண்டனையை எதிர்க்கிறார்களாம். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், சட்டம் தொடர்பானது இல்லை. உயிரைப் பறிக்க அரசாங்கத்துக்கு உரிமை இல்லையாம். அதுவும் கொலை தானாம். நல்லா சொல்றாங்க டீட்டெயிலு. சில நண்பர்கள் எழுதி இருப்பது போல், தண்டனை என்பது குற்றவாளியை திருந்த மட்டுமில்லை. அது போன்றக் குற்றம் மீண்டும் நிகழாமல் இருக்கவும் தான். மனிதனுக்கு இருக்கும் உச்சகட்ட பயமே உயிர் பயம் தான். உயிரோடு இருக்கத்தான் எல்லாம் செய்கிறார்கள். தன் செயலால் அந்த உயிரே போய்விடும் என்று தெரிந்தால் தயங்குவார்கள் அல்லவா?. ஆகவே சில குற்றங்களுக்கு மரண தண்டனை அவசியம். 

இந்த சம்பவத்தில் இறந்த 3 பெண்கள் மட்டும் தான் அனைவருக்கும் தெரிகிறார்கள். ஒருவேளை மற்றவர்களையும் காப்பாற்ற முடியாமல் போயிருந்தால்?. இந்த கூலிப்படையின் நோக்கம் இந்த 3 பெண்களை மட்டும் கொல்வதல்ல. ஒட்டு மொத்த மாணவிகளையும் கொல்வது தான். எனவே இதில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் மரண தண்டனை அளித்திருக்க வேண்டும். 

இல்ல இல்ல.. என்ன காரணம் சொன்னாலும் மரண தண்டனை தவறு தான் என சொல்பவர்களுக்கு:  

போங்கய்யா நீங்களும் உங்க மசுரப் புடுங்குற மனித உரிமையும்..

50 comments:

தமிழ் பிரியன் said...

100 சதவீதம் ஒத்துப் போகும் பதிவு. மரணதண்டனை என்ற பயமே இங்கு குற்றங்கள் குறைவாக இருக்கக் காரணம்.

தமிழ் பிரியன் said...

+1

சந்தோஷ் = Santhosh said...

அப்படியே என்னோட எண்ணங்களை சொல்லி இருக்க மச்சி.. இந்த மனித உரிமை மகானுங்க.. கரெக்டா ரவுடி, தீவிரவாதிங்க மாதிரியானவங்களுக்கு எதிராக அளிக்கப்படும் தண்டனைகளின் பொழுது மட்டும் வந்துடுவாங்க... அவனுங்க வீட்ல எழவு விழுந்தா தெரிந்து இருக்கும்...கேட்டா அவனுங்களை கொன்னா அவங்க கஷ்டப்பட மாட்டாங்களாம..அவங்க குடும்பம் தான் கஷ்டப்படுமா.. அவங்களால செத்தவன் வீட்ல இருக்குறவங்க குடும்பமா தெரிலையா இல்லை அவங்க கஷ்டப்படலையா?

*இயற்கை ராஜி* said...

good post sanjai.. oru vote than poda mudiyuma?

குழலி / Kuzhali said...

ஏன் அந்த எக்ஸ் பெயரை சொல்லக்கூடாதா? ஏன் மறைக்கிறீங்க, பேரை சொல்ல வேண்டியது தானே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாலேயே பெயர் தேவையில்லையா? அப்போ அந்த 3 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தால் அவர்கள் நிரபராதி ஆகியிருப்பாங்களோ? அந்த எக்ஸ்ம் கீழ்கோர்ட்டில் விடுவிக்கப்படவில்லையே, நேத்துவரை அவர் குற்றவாளி இன்னைக்கு அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர் அதனால் பெயர் தேவையில்லை அப்படித்தானே, ஒரு வேளை இந்த 3 பேரும் உச்சநீதிமன்றத்துக்கும் மேலே ஒரு கோர்ட் இருந்து இவர்களை வழக்கிலிருந்து விடுவித்தால் இவர்களையும் எக்ஸ்,ஒய்,இசட் என்பீர்களோ? ஆப்டர் ஆல் பதிவில் பெயர் குறிப்பிடுவதற்க்கே இப்படி எக்ஸ் என்று சொல்கின்றீரெனில்....

குழலி / Kuzhali said...

// அவனுங்க வீட்ல எழவு விழுந்தா தெரிந்து இருக்கும்...//
அவனவன் வீட்டில் எழவு விழுந்தா கஷ்டம் தான் மனித உரிமை பேசமாட்டானுங்க தான் நான் உட்பட

பிரியமுடன் பிரபு said...

@$%^&^^(*)&$%

ellam kedda vaarthai

manusanukkuthaan manitha urimai kamisan

intha naikaLukku illa

verumuna red croess poradaddum

SanjaiGandhi™ said...

குழலி, வொய் டென்ஷன்? அவரை நிரபராதி என எங்கே சொன்னேன்? அவர் தான் ஆள் அனுப்பினார் என்று நான் நம்புகிறேன். அவர் தான் அனுப்பினார் என்றும் எழுதி இருக்கிறேன். ஆனால் வழக்கில் இருந்து விடுவிக்கப் பட்ட ஒருவரை, இல்லை அவர் தான் அனுப்பினார் என பெயர் சொல்லி என்னால் எழுத முடியாது. மற்ற அனைவரையும் விடுவித்திருந்தால், பொதுவாக அனைவரையும் விமர்சிப்பேனே ஒழிய பெயரைப் பயன்படுத்தி இருக்க மாட்டேன்.. என்னால் மாற்ற முடியாத வரை நான் இந்த நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுபட்டாக வேண்டும்.

சத்ரியன் said...

//சில குற்றங்களுக்கு மரண தண்டனை அவசியம். //

என் ஓட்டும் உண்டு.

ஜோதிஜி said...

ஏற்கனவே உங்கள் பின்னோட்டத்தை அதன் தொனியையும் படித்தேன். முழுமையாக உங்கள் கருத்துடன் ஒத்துப் போகின்றேன்.

சட்டங்கள் என்பது கடுமையாக இல்லாதபட்சத்தில் இங்க எல்லாமே எளிது. எதுவரைக்கும்?

அய்யோ மனித உரிமைகள் பாதிக்கப்படாதா என்று கூவும் வரைக்கும்?

சம்மந்தப்பட்டவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தேன். நிறைவாய் இருந்தது உங்கள் பதிவு. நன்றி.

டுபாக்கூர் பதிவர் said...

ஒரு வேளை இவங்க கருணை மனு போட்டாக்கூட, அஃப்சல் குருவை தூக்குல போட்ட பின்னாடிதான் இவங்க மனு சனாதிபதி பார்வைக்கு வருமா!

வயித்தெறிச்சலா இருக்குங்க, துள்ளத் துடிக்க மூணு அப்பாவி பொண்ணுங்க செத்துப் போயிருக்கு, இன்னும் நடைமுறை அது இதுன்னு குற்றவாளியை உக்கார வச்சு சோறு போட்டுட்டு இருக்கோம்.

Robin said...

//எனவே இதில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் மரண தண்டனை அளித்திருக்க வேண்டும். //
சரியாகச் சொன்னீர்கள்.
இப்படி மற்றவங்களை கொலை செய்து பிழைப்பு நடத்தணுமா?

அபி அப்பா said...

நல்ல தீர்ப்பு!

கும்க்கி said...

ஒரு சின்ன தகவல் சஞ்சூ.,

ஸ்ட்ரைக், அதனால் பஸ்ஸை விடமாட்டோம் என தடுக்கப்பட்டிருக்கின்றனர்.
மாணவர்களெனில் பரவாயில்லை.மாணவிகளும் இருப்பதால் பாதுகாப்பாக மிக அருகில் சுமார்40கி மீ தொலைவில் உள்ள பையூர் அரசு பண்ணைக்கு போய் விடவேண்டும் என தடுப்பை மீறி பஸ்ஸை கிளப்பியதால் தொடர்ந்த அந்த விஷ ஜந்துக்கள் திட்டமிட்டே பெட்ரோல் கேன்களுடன் பைக்கில் விரட்டி வந்து மறித்து உள்ளே ஆட்கள் இருக்கிறார்கள் என தெரிந்தும் கொளுத்தியிருக்கிறார்கள்.

இது திட்டமிட்ட படுகொலைகள்தான்.
உடனே தூக்கிலிடப்படவேண்டும். மேலும்
மேல் முறையீடு, கருணை மனு என காலம் கடத்தாமல் தண்டனையை நிறைவேற்றினால்தான் கொஞ்ச நஞ்ச நம்பிக்கைகளாவது மிஞ்சும்.

பாராளுமன்றம் மீதான தாக்குதல் குற்றவாளிகளுக்கே இன்னமும் தண்டனை நிறைவேற்றப்படாத பட்சத்தில் இது மட்டும் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகம்தான்..

SanjaiGandhi™ said...

தகவலுக்கு நன்றி கும்க்கி.. சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதால் கோர்வையாய் எழுத முடியவில்லை.. நீங்கள் சொல்வது சரி தான்.. அப்படித்தான் துரத்தி வந்தார்கள். மாணவிகள் உள்ளே இருப்பது தெரிந்து தான் தீ வைத்தார்கள். அவர்கள் ஜன்னல் வழியே தப்பிக்கக் கூடாது என்று தான் கற்களை வீசினார்கள். திட்டமிட்ட படுகொலை தான்.

விரலை வெட்டினாலே , அய்யகோ என்னே ஒரு விசுவாசம் என அழைத்து பாராட்டி பரிசு கொடுக்கும் தலைவிக்கு நரபலி படையல் வைத்தால் மேலும் பரிசு மழை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடத்தப் பட்ட நரபலி அந்த சம்பவம்.

ரிஷபன்Meena said...

இவர்களுக்கு எப்போ மரண தண்டனை நிறைவேறுமோ தெரியாது. நம்ம அரசாங்கம் அதுக்கும் ஒரு க்யூ வச்சிருக்கு, கருனை மனு போட்டுட்டா போதும் குற்றவாளி இயற்கையா மரணத்தை தழுவும் வரை பரிசீலித்துக் கொண்டே இருக்கும்.
//தண்டனை என்பது குற்றவாளியை திருந்த மட்டுமில்லை. அது போன்றக் குற்றம் மீண்டும் நிகழாமல் இருக்கவும் தான்.//

நீதிமண்றம் தண்டனை தந்தும் தூங்கி வழிவதால் குற்றம் செய்பவர்களுக்கு ஊக்கம் வருகிறது.

காலதாமதம் செய்ய உதவும் அரசியல்வாதிகளையும் , சமூக விரோதிகளுக்கு மட்டுமே பரிந்து வரும் மனித உரிமை ஜடங்களையும் இவர்களுடன் சேர்த்து தூக்கில் போடனும்

ராஜவம்சம் said...

போங்கய்யா நீங்களும் உங்க மசுரப் புடுங்குற மனித உரிமையும்..//

நன்றி சஞ்சய் அனுதாபத்துடன் கூடிய சிறப்பானப்பதிவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Good Sanjay

ரம்மி said...

இங்கு அரசு அடக்குமுறை மட்டுமே, மனித உரிமை மீறல்! மக்கள் எனும் போர்வையில் உலவும் மிருகங்கள் நடத்தும் பயங்கரம், போராட்டத்தின் பரிமாணம்! மிருகங்களை நாயகனாக்கும், அருந்ததி ராய்கள்! அந்நிய மண்ணில்,அடிமையான கூந்தலழகிகள், பிறந்த மண்ணை ஏசித் திரியும் போக்கு! வெட்கம்!

கும்மி said...

'அங்கு' இட்ட பின்னூட்டம் இங்கும்
-----------
குற்றம் நடைபெற்றது வாய்க்கா தகராறுக்கோ, இல்லை வரப்பு தகராறுக்கோ அல்ல. தன் கட்சியின் தலைமையை குளிர்விக்க ஒரு ரவுடி கும்பல் செய்த செயல் இது. வக்கீல் ஒருவரை தாக்கியவருக்கு, எம்பி சீட் கொடுத்த தலைமை, உயிரோடு மாணவிகளை கொளுத்தினால், தனக்கு ஒரு எம் எல் ஏ சீட் கூடவா கொடுக்காது என்னும் எண்ணம்தான் இந்த குற்றத்தின் ஊற்றுக்கண்.

இது போன்ற செயல்கள் சமுதாயத்தில் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்திவிடும். கட்சியில் பெரிய ஆளாக வேண்டுமா, நாலு பேரைப் போட்டுத் தள்ளு என்பது கொள்கையாகி விடும். இவற்றையெல்லாம் களைய, இதுபோன்ற குற்றங்களில் தண்டனைகள் கடுமையாக வேண்டும்.

ஹாலிவுட் பாலா said...

நீங்க ** போட்டு எழுதியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. நானா இருந்திருந்தா... கெட்ட வார்த்தை போட்டே எழுதியிருப்பேன்.

சென்ஷி said...

வழிமொழிகிறேன் சஞ்சய்.

சின்ன அம்மிணி said...

இறந்து போனவர்களைப்பற்றி உண்மையிலேயே வருத்தப்படுபவர்கள் இவர்களை நிச்சயம் தண்டனையில் இருந்து காப்பாற்ற முன் வரமாட்டார்கள். இவர்களுக்கு தரப்படும் தண்டனையைப்பார்த்து பயந்தே இனி எவரும் இந்த மாதிரியான குற்றங்களை செய்ய பயப்படவேண்டும்.

DrPKandaswamyPhD said...

மனித உரிமை அமைப்புகள் நாசமாப்போக.

முகிலன் said...

தூக்குல எல்லாம் போடக்கூடாதுன்னே.. உயிரோட கொளுத்தி விடனும். அப்பத்தான் இவனுங்களுக்கு அந்தப் பொண்ணுங்க என்ன கஷ்டப்படும்னு புரியும்.

basheer said...

மக்களவை மயிராண்டிகள் தங்கள் சம்பளத்தை கூட்டச்சொல்லி,பிச்சைஎடுக்கும் நேரத்தில்
இந்த கருணை மனு,கருமாந்திர மனுவுக்கு ஒரு முடிவு கட்ட (சட்ட திருத்தம் கொண்டு வர) போராடியிருந்தால் மக்கள் மனதில் சிறிதளவாவது மரியாதை கிடைத்திருக்கும்.2 க்கு 2 சைஸ் கதவ தொறந்துகிட்டு டிரைவர் தாயோளி ஓடிப்போயிருப்பான்.வண்டிய விட்டு
அத்தனை பேர் மேலயும் ஏத்தியிருக்கணும்.எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூரங்கள் நடக்காமலிருக்க
ஒரு வழியாவது கிடைத்திருக்கும்.பொறுக்கி நாய்களுக்கும் ஒரு பயம் வந்திருக்கும்.

குசும்பன் said...

மாமா கடுமையான சட்டங்கள் மூலம் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியும் என்று நம்புவபவன் நான். இவனுங்களை எல்லாம் தூக்கில் போட்டு விடக்கூடாது.. அப்படியே ஒரு பத்து லிட்டர் பெட்ரோல் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊத்தி ஒரு ஒரு பாகமாக எரிச்சு சாவ அடிக்கனும்.

இதோடு மதுரை தினகரன் அலுவலகத்தில் நடந்த ஏசி விபத்தில் இறந்த மூன்று பேரும் ஏனோ நினைவுக்கு வருகிறார்கள்... நீதி ஒரு போதும் சாகாது, மயிரை புடுங்காது என்று சொல்லிக்கிட்டே நாம் இருக்க வேண்டியதுதான்.ஆட்சியில் இருந்தால் ஒரு நீதி இல்லை என்றால் ஒரு நீதி. வாழ்க சவ நாயகம்.

Jo Amalan Rayen Fernando said...

தலைப்பை அசிங்கமாக வைத்து எதிர் கருத்து சொல்வோரை (அதான் ம.உரிமைவாதிகளை) திறமையாக அவர்கள் எழுதும் முன்பே சென்சார் பண்ணி, உங்களுக்கு வேண்டிய்வர்கள் எழுதும்படி பண்ணிவிட்டீர்கள்.

சத்தியமா, நான் ம.உ.ஆசாமியல்ல.

நான் சொல்லவிரும்புவது: பதிவு போடும்ப்போது, தலைப்புகளை நிதானமாகப்போடுங்கள். இரு தரப்பு கருத்துகளும் வரட்டும்.

ஒரே தரப்பு என்று எதிலுமே இல்லை. நாளை உங்கள் கருத்துகூட மாறலாம். நினைவிருக்கட்டும்.

மெயின் பாயிண்டுக்கு வருவோம்: உங்கள் கருத்து, மற்றும் இங்கே எழுதிய்வர்கள் கருத்தின் படி, இப்படிப்பட்ட தண்டனைகள் இப்படிப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் என்பது.

சரியில்லை.

ஆவேசத்தில் செய்யப்படாமல், திட்டமிட்டு நிதானித்துச்செய்யும் குற்றங்கள் மட்டுமே தடுக்கப்படலாம்.

அவர்கள் யோசிப்பார்கள்: இப்படி நான் பேருந்தை தீவைத்து உயிர்க்கொலை செய்தால், நமக்கு மரணதண்டனைதான் என்று. எனவே செய்யாமல் போகலாம். (மேலும், இப்படி பேருந்து கொழுத்தப்பட்டு உயிர்க்கொலைகள் நடாத்தப்பட்டு, மரணதண்டனை உச்சனீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டு, குடிய்ரசுத்தலைவரால் கருணைமனு நிராகரிக்கப்பட்ட வழக்குகள் உண்டு. எடு. குண்டூர் வழக்கு. ஐவர் தூக்கிலிடப்பட்டனர். எனவே, அது தர்மபுரிக்குற்றவாளிகளைத் தடுக்கவில்லையே ஏன்? ஒர்வேளை அவர்களுக்குத் தெரியாமலிருந்திருக்கும். உங்களுக்குக் கூட நான் சொல்லித்தான் தெரியும். இல்ல? எனவே விளம்பரமும் அவசியம்)

ஆனால், ஆவேசத்தில் செய்யப்படும் கொலகளை இது தடுக்கவே தடுக்காது என்பது, மரணதண்டனை அவசிய்மைல்லை எனச்சொல்லும் உங்கள் சோ கால்டு எதிரணியின் வாதங்களில் ஒன்றாகும்.

எங்களுக்குத்தான் சமூக அக்கறை. மற்றவர்களுக்கு இல்லை என்பது bombast.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நீங்கள் விட்னெஸ் பண்ணினீர்களா சஞ்சய். ரொம்ப லைவாக எழுதியிருக்கிறீர்கள். படிக்கவே முடியவில்லை. கொடூரம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நீங்கள் விட்னெஸ் பண்ணினீர்களா சஞ்சய். ரொம்ப லைவாக எழுதியிருக்கிறீர்கள். படிக்கவே முடியவில்லை. கொடூரம்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

உங்கள் கருத்துடன் ஒத்துக்கொள்கிறேன்..

தூக்கு தண்டனை தேவையில்லை.. எப்பொழுது..

குற்றம் செய்தவர் ஆயுள் வரைக்கும் அடைபட்டுக்கிடக்கும் நிலை இருந்தால். காந்தி பிறந்த நாள், செம்மொழி மாநாடுன்னு காரணம் சொல்லிக் குற்றவாளிகளை விடுதலை செய்யாமல் இருந்தால்..

அடுத்த ஆட்சி வந்தால்.. இவர்கள் எரித்த பெட்ரோலில் பஸ் எரியவில்லை. பேருந்தின் பெட்ரோல் டேன்க் எரிந்து எரிந்தார்கள் என்றும் மாற்றிக்கூறுவார்கள்..

ஆறுமுகம் said...

கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது.

திருஞானசம்பத்.மா. said...

//.. சில குற்றங்களுக்கு மரண தண்டனை அவசியம். ..//
உண்மைதான்..

baba said...

Thandnaikal kadumaya irundhalthan kutrangal kuraiyum

கானகம் said...

மிகச்சரியான பதிவு.

அன்புடன் சிவா said...

தண்டனைகள் இன்னும் நம் நாட்டில் கடுமையாக்கபடவேண்டும் என்பதே என் கருத்து.
ஆயுள் தண்டனை பெற்ற மிககொடிய கொலைகாரர்கள் எழு வருடத்தில் விடுதலை பெற்றதும் இந்த தமிழ்நாட்டில்.

19 வருடம் ஆகியும் நளினி போன்றவர்கள் விடுதலை செய்ய மறுக்கப்படுவதும் இந்த தமிழ்நாட்டில்.

மாமு, காசும், செல்வாக்கும் இருந்தா எதுவும் பண்ணமுடியும் என தெனாவெட்டில் வாழும் மக்களுக்கு இன்னும் தண்டனைகள் கடுமையாக்க படவேண்டும்

Mitr Friend - Bhushavali said...

Sanjai, you reminded me that horrible day!!! Hemalatha and I lived in the same street. That day morning, after seeing the newspaper, I came out to see if anything was odd. I was wondering, if there was yet another Hemalatha in her batch. But the reality was worse. It was her!!! The lady I met almost everyday, to whom I waved everyday, was brought in a coffin. I was there at her home that evening. Her mom's cry, till date is ringing in my ears.
I came home and went to the terrace and cried all by myself!!!
A date that I could never forget till date, even after several years!!!!!
Roadtrip to Mayanur
The Shirt Dress to Office

Mitr Friend - Bhushavali said...

Seriously, the bloody guys must be hanged or even better, SHOT!!!
Roadtrip to Mayanur
The Shirt Dress to Office

சுரேகா.. said...

நான் அன்னிக்கே சொன்னேன்...பஸ்ஸு பக்கத்துலயே வச்சு எரிச்சுறலாமுன்னு...! கேட்டாத்தானே.. இன்னும் பாருங்க! கருணை மனு! கxxxxxx மனுன்னு போட்டு வெளில வரப் பார்ப்பாங்க!

இந்த மனித உரிமை ஆர்வலர்கள் வீட்டுப்பொண்ணுங்களா இருந்தா??? தனக்குன்னு வந்தா.......!!

விடுங்க பாஸு!
---------------------
டிஸ்கி:

இந்த காங்கிரஸே இப்படித்தான் :))))))))))

MuruganMK said...

உண்மையில் இந்த சம்பவம் நடந்த நாள் முதல் என் மனம் ஏங்கியது அவர்களின் மரணநாள் ஒலிக்கும் நாள் அறிய..

பொது இடத்தில் தீ வைத்து கொன்றவர்களை, பொது இடத்திலேயே தூக்கிலிட வேண்டும். அபோதுதான் மரணத்தின் வலி இதுபோன்றவர்களுக்கு தெரியும்..

வளரத்துடித்த மலர்...கள்
வதைக்கப்பட்டனர் இவர்கள்
பள்ளி சென்றது இவர்கள் பிழையா?
பாவிகள் கொன்றது காரணம் எதுவோ?
பெற்றோருக்கு கண்ணீர் மட்டுமே மீதி
கயவரின் மரண நாளை - நாம்
தித்திப்போம் மலர் தூவி மறைந்த இந்த மங்கையருக்கு.......

சே.வேங்கடசுப்ரமணியன் said...

அந்த மூன்று மாணவிகளுள் நான் படித்த விருத்தாசலம் கொள்ஞ்சியப்பர் அரசினர் கலைக்கல்லூரி யின் விலங்கியல் பேராசிரியரின் மகளும் ஒருவர்.மிக மென்மையான மனிதர்.எங்களுக்கெல்லாம் ஆதரவாக இருந்தவர்.அவர் இப்போது எங்கிருக்கிறார் எனத்தெரியவில்லை.உங்களின் இந்தப்பதிவினையும் எர்திவினைகளையும் அவர் படித்தால் அவருக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும்.மரண தண்டனை ok. மூன்று பேர் என்பது பத்தாது.

கண்ணா.. said...

தூக்கு தண்டனைல்லாம் வேஸ்டுங்க.... பதிலு இவுனுகளை எரிச்சுறணும்.... அப்போதான் இது மாதிரி அடுத்தவங்க செய்ய கொஞ்சமாச்சும் யோசிப்பாங்க

சிவகுமார் said...

your font color for the links in the right side is too light. Please change it.

Rajesh said...

100 சதவீதம் ஒத்துப் போகும் பதிவு.
இந்த மனித உரிமை மகானுங்க.. கரெக்டா ரவுடி, தீவிரவாதிங்க மாதிரியானவங்களுக்கு எதிராக அளிக்கப்படும் தண்டனைகளின் பொழுது மட்டும் வந்துடுவாங்க...
தண்டனைகள் இன்னும் நம் நாட்டில் கடுமையாக்கபடவேண்டும் என்பதே என் கருத்து.

SanjaiGandhi™ said...

கருதுத்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து நன்பர்களுக்கும் நன்றி. இனி இது போல் நடக்கவே கூடாது. குற்றங்கள் குறைய நிச்சயம் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்.

@புஷா , உன் வலி புரியுதுடா.. அன்று கட்டுப் படுத்த முடியாமல் நானும் அழுது தீர்த்தேன். ந்ம்மால வேறு என்ன செய்ய முடியும்?

கொல்லான் said...

பாராளுமன்ற தாக்குதல்ல ஈடுபட்ட 'முஸ்லிம்' தீவிரவாதிக்கு தண்டனை 'தருவதில்' ஏன் இன்னும் தாமதம்? ஓட்டுப் பொறுக்கும் அரசியல்?
அங்கும் செத்தவர் நிறைப் பேர் தானே?

ராஜவம்சம் said...

கொல்லான் –
பாராளுமன்ற தாக்குதல்ல ஈடுபட்ட 'முஸ்லிம்' தீவிரவாதிக்கு தண்டனை 'தருவதில்' ஏன் இன்னும் தாமதம்? ஓட்டுப் பொறுக்கும் அரசியல்?
அங்கும் செத்தவர் நிறைப் பேர் தானே//

அப்படியே கொஞ்சம் பின்னாடி போங்க பாபர் மஸ்ஜீத் வரும்.

SanjaiGandhi™ said...

கொல்லான், என்ன சொல்ல வரிங்க?
அதனால இவங்களுக்கு புனிதர் பட்டம் குடுத்து மந்திரி ஆக்கிடலாம்னு சொல்றிங்களா? எதுக்கெல்லாம் ஒப்பிடனும்னு ஒரு அளவு இல்லையா சார்?

மின்னலன் said...

ஹாய் சஞ்ஜய்... உங்களது கருத்துக்களோடு நானும் உடன்படுகிறேன். இது விளம்பர உலகம் ...அதான் இப்டியெல்லாம்

தண்டணைகளில் கடுமை குறைய குறைய, தங்களுக்கு சாதகமாய் இல்லை என்றால் தேசத்தை காட்டி கொடுக்கவும் காவு வங்கவும் தயாராயிருக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்காக இந்தியாவின் சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்!!!

வி.என்.தங்கமணி, said...

arumayaana pathivu. (Gulf) arabunaadupole innum kadumayaana thandanai ethaavathu koduththaal nantraaka irukkum. nantri nanbare.
vaalga valamudan.

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget