August 26, 2010
Express கூடல் - இந்தியன் எக்ஸ்பிரசில் கோவைப் பதிவர்கள்
சென்ற வாரத்தின் ஒரு இனிமையான மாலை வேளையில் நிர்மலா மகளிர் கல்லூரிக்கு அருகில் அட்மாஸ் உணவகத்தின் அழகான இயற்கை சூழலில் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் செய்தியாளர் அனுலா, கோவை வலைப்பதிவர்கள் சிலருடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பெரிய கப்பில் காஃபியும் ரம்மியமான இயற்கை சூழலும் நண்பர்களின் ஜாலியான உரையாடல்களும் அந்த மாலை வேளையை மேலும் இனிமையாக்கியது. அந்தக் கலந்துரையாடல் பற்றிய செய்தி 25.08.2010 அன்று இந்தியன் எக்ஸ்பிரசில் வெளி வந்திருக்கிறது. கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்த அனுலாவுக்கு நன்றிகள். சந்திப்பு புகைப்படங்களுக்கு பழமைபேசி தளத்தை அனுகவும் :)
அங்கு தான் கோவை வலைப்பதிவர்களுக்கென கூடல் குழுமம் ஆரம்பிக்கும் எண்ணம் பிறந்தது. இப்போது நாங்கள் கூடலில் கூடிக் கும்மி அடித்துக் கொண்டிருக்கிறோம்.. :)
Labels:
சந்திப்பு,
பதிவுலக உறவுகள்,
புகைப் படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)

8 comments:
சஞ்சய் நானும் கூட இருந்தேன்....
"கூடல்" என்பது ஒரு இடம், ஊரைக் குறித்துச் சொல்லப்படுவது என்றால் அது மதுரையைக் குறிக்கும் தமிழ் வார்த்தை! கூடல் மா நகரம், கூடல் நகரம் என்றால், அது மதுரை தான்! கொங்குமண்டலப்பதிவர் குழுமத்திற்குப் பொங்கு தமிழ் என்று கூடப் பெயர் வைத்துக் கொள்ளலாமே!
வாழ்த்துக்கள் நண்பர்களே!
கிருஷ்ணமூர்த்தி சார், ஒன்று கூடல் என்ற அர்த்தத்தில் மட்டுமே இந்தப் பெயரை தேர்வு செய்தோம்.. வேறு காரணங்கள் ஆராயப் படவில்லை. எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.. அப்டியே இருக்கட்டும்னு விட்டுட்டோம்.
நன்றி சேர்தளத்துக்காரரே.. :)
சங்கமேஸ், இந்த கட்டுரை முழுமையான தொகுப்பாக இல்லை.. ஏன்னு தெரில பாஸ்..
அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)
//பெரிய கப்பில் காஃபியும்//
சஞ்சய் உங்களை பத்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வரை தெரிஞ்சு இருக்கு :).
Hurray!!!
Post a Comment