September 1, 2010

அட்றா சக்க அட்றா சக்க - அமீரு சாரு சத்தியராஜிகாரு

ழம், ஈழத்தமிழர் என்ற வார்த்தைகளைக் கேட்டாலே நம்மூர் போலித் தமிழ் ஒணர்வாளர்கள் பொங்கிடுவாங்க. மூச்சுத் திணறத் திணற பேசுவாங்க. உடல் பொருள் ஆவி (ஆனந்த விகடன் இல்லை.) எல்லாம் தமிழருக்கே என்பார்கள். பேசி முடிச்ச அடுத்த நொடி புரட்சி வெடிக்கும் என்று நினைக்கும் அளவு ஒணர்ச்சி வசப்படுவாங்க. வைகோ, திருமாவளவன், ராமதாஸ் மற்றும் நம்ம குபீர் ஈழத்தாய் எல்லாம் சில நெருக்கடிகளில் வாழ்பவர்கள். அவர்கள் நிலை நமக்கு நன்றாகவேத் தெரியும். ஏ(ஓ)ட்டுச் சுரைக்காய்கள்.

அவங்களுக்கு அடுத்து ஈழம் என்றால் உயிரை விடத்துடிப்பவர்களாக காட்டிக் கொள்பவர்கள் நம்ம கலை உலக கண்மணிகள் தான். இவங்களுக்கு சினிமால நடிக்க வருதோ இல்லையோ மேடையும் மைக்கும் கிடைச்சா அவ்ளோ தான். அடடா.. எத்தனை ஆஸ்கர் விருது தந்தாலும் போதாது. அம்புட்டு நடிப்பைக் கொட்டு கேக்கறவங்களையும் பாக்கறவங்களையும் திக்குமுக்காட வச்சிடுவாங்க. அதுல முக்கியமானவங்க சீமான், பாரதிராஜா, சத்தியராஜ் மற்றும் அமீரு.

சிறைக்கு போனதும் அய்யோ என்னால இந்த மாதிரி சிறைல எல்லாம் இருக்க முடியாது. நான் சொகுசுப் போராளி என்று மொதல் வகுப்புக் கேட்டுப் போராடினாலும் கூட, சிறைக்கு செல்வோம் என்று தெரிந்தும் பேசுகிறார் என்பதால் அவரை பாராட்டலாம். பாரதிராஜா பாவம். அவர் காலைல கர்ஜித்துவிட்டு மாலையில் கோபாலபுரத்தில் கோயிந்தா கோயிந்தா என்று பூஜை புணஷ்காரம் செய்து பரிகாரம் தேடிக் கொண்டார். அவரும் பாவம்.. பொழைச்சிப் போகட்டும்.

அடுத்து அமீரு சாரும் சத்தியராஜிகாரும். இவங்க அலப்பறையத் தாங்கவே முடியாது. சமீபத்திய விகடன் பேட்டியிலையே அமீரு சாரு எம்மாம் பெரிய டகால்ட்டி பார்ட்டின்னு காண்பிச்சிட்டாரு. ஆனாலும் அதை அடுத்த கனமே மறந்துட்டு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உதார் விட்டுட்டுத் திரியறார். இந்த இரண்டு மாபெரும் பிழைப்புவாதிகளும் ( எல்லாம் கொம்யூனிச சகவாசம் தான்) மீண்டும் வாயெலலம் பல்லாய் இளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓவர் டூ ஜூனியர்விகடன்..

அமீரு சாரு பேசறாரு ...
 
”எல்லோர் பேச்சையும் பொறுமையாகக் கேட்ட அமீர், ''விழாவுக்கு வர்றதுக்கு முன்பே 'தயவுசெய்து பேசச் சொல்லிடாதீங்க'ன்னு விழா அழைப்பாளர்கள்கிட்டே ஒரு மணி நேரம் என்னோட குமுறலை எல்லாம் கொட்டிட்டுத்தான் வந்தேன்.”

( பின்ன, தனியா பேசினாத்தானே ஜெயிலுக்குப் போகாம இன்னும் நெறைய மசாலா படம் புடிச்சி காசு பார்க்கலாம்)

”அதை இப்போ இங்கே பேசினா, நாளைக்கு நான் வெளியே இருக்கவே முடியாது.
( ஏன், நாளைக்கு எதும் ஷூட்டிங் இருக்கா? இப்போ தான் சார் ஹீரோ வேற ஆய்ட்டிங்க.. கால்ஷீட் ப்ராப்ளம் ஆகிடும்ல உள்ள போனா )

'முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் ஒரு நாள் கலந்துகொண்டதைத் தவிர வேறு என்ன செய்தோம்?' (ஏன் எதும் செய்யல) என்ற ஒரு குற்ற உணர்வு எனக்கும் இன்னும் இருக்கு.
( இருந்து? தொப்புள் கொடி உறவுகளுக்காக எதுவும் செய்ய முடியாததால் தமிழனாக இருக்கவே வெட்கப் படுகிறேன் என கோரஸ் பாடிய பதிவர்கள் ஆஃப் ஆய்ட்டாங்க. இப்போ உங்க முறையா பாஸ்.. ஹ்ம்ம் நடத்துங்க. )

60 வருஷமா அடுக்குத் தமிழில் பேசிப் பேசியே ஆட்சியிலும் உட்கார்ந்துவிட்டார்கள். அதெல்லாம் முடிஞ்சுபோன பழைய கதை. அதனால் நாமாவது அறிவுப்பூர்வமாகப் பேசுவோம். அவரவருக்கு என்ன முடியுமோ, அதை நம் இனத்துக்காகச் செய்வோம். அதையும் தாண்டி அரசியலால்தான், போராட்டத்தால்தான் வென்றெடுக்க முடியும் என்ற நிலை வந்தால்... அதையும் செய்வோம்!'' என்றார் வேகமாக
( முடியல.. அடிக்கிறாரு பாருய்யா ஸ்டண்டு )
 
சத்தியராஜிகாரு..( நடிச்ச பெரும்பாலான படங்களில் தன்னை கவுண்டனாகவே காட்டிக் கொண்ட தீவிர சாதி மறுப்பாளர். பெரியாரின் ஒரே தொண்டர்.) பேசறாரு..


”உண்மையைச் சொல்லணும்னா... நான் வசதியான குடும்பத்தில் பிறந்து, சொகுசா வாழ்ந்து பழக்கப்பட்டவன். அதனால் எனக்கு சிறைக்குப் போகத் தைரியம் கிடையாது.”
( நல்லா பாருங்க மக்களே.. மகாத்மா காந்தி, நேதாஜி, நேரு, பெரியார் எல்லாம் வறுமைல வாழ்ந்தவங்களாம். அதனால தான் தைரியமா ஜெயிலுக்குப் போனாங்களாம். சொல்றது யாருன்னாங்க்ணா , பெரியார் பெயரை சொல்லி ஊரை ஏமாற்றும் கவுண்டனுங்க்ணா )

”சிறைக்குச் செல்லும் தைரியம் என் தம்பி செந்தமிழன் சீமானுக்குத்தான் உண்டு.”
( அதும் மொதோ வகுப்பு சிறைக்கு )

”என் மனதில் உள்ள கோபத்தை எல்லாம் இங்கே நான் பேசிக் கொட்டினால், ஆயுளுக்கும் வெளியே வர முடியாது. அப்புறம் 'இரண்டு முகம்'தான் எனது கடைசிப் படம் ஆகிடும்!''
( அட்றா சக்க அட்றா சக்க.. ஆக, நம்ம கவலை எல்லாம் இன்னும் எவ்ளோ படம் புடிக்கனும்.. கட்டிபுடிச்சி ஆடனும்.. காசு பார்க்கனும் என்பது தான்.. அப்புறம் என்னத்துக்குங்க்ணா மேடையிம் மைக்கும் கெடைச்சா பொளந்துக் கட்றிங்க.. சும்மா டமாசு..? கேக்கறவன் எல்லாம் கேணையனுங்கன்னு நெனப்பு..? )

டிஸ்கி: ஆமாமா இவங்கள பத்தி யாருக்கும் தெரியாது.. இவன் புதுசா கண்டுபிடிசிட்டான் என்னும் நல்ல உள்ளங்களுக்கு.. ”யாரடி நீ மோகினியில் தனுஷ் சொல்லும், அய்யோ மேடம் ஆஸ்த்ரேலியா.. ஆஸ்த்ரேலியாவா ? நான் பார்த்த்..பார்த்த..பார்த்ததே இல்லை” என்னும் ரீதியில் அய்யோ சத்யராஜ், அய்யோ அமீரு, அய்யோ சீமாரு என்று உருகுபவர்களுக்காக மட்டுமே இந்த பதிவு

9 comments:

அபி அப்பா said...

செம காரம்!

டுபாக்கூர் பதிவர் said...

சூப்பர்....,

Robin said...

//உண்மையைச் சொல்லணும்னா... நான் வசதியான குடும்பத்தில் பிறந்து, சொகுசா வாழ்ந்து பழக்கப்பட்டவன். அதனால் எனக்கு சிறைக்குப் போகத் தைரியம் கிடையாது.// :)

திருஞானசம்பத்.மா. said...

பட்டய கிளப்புரிங்க..!!

mrradha said...

போங்கய்யா நீங்களும் உங்க ம** புடுங்கற "பதிவும்”

SanjaiGandhi™ said...

mrraadha, இது மாதிரி லுச்சாத்தனமாக கமெண்ட் போடாம காரணம் சொல்லிட்டு திட்டினா பதில் சொல்ல வசதியா இருக்கும்..

mrradha said...

தமிழ் உணர்வாளர்கள் என்று காட்டிக் கொள்கிற போலிகளைக் கண்டிப்பதைக் காட்டிலும் தமிழ் உணர்வோடு இருப்பதை நக்கலடிக்கிற அரிப்புதான் மேலே உள்ள பதிவு. அந்த வகையில் இதுவும் ஒரு ம** புடுங்கற பதிவே.

ஒரு லுச்சாவுக்கு பின்னூட்டம் போடும் போது லுச்சாத்தனமாகப் போட்டால் போதும்.

Joseph said...

சஞ்செய்,
வருமான வரி கட்டும் எவருக்கும் சிறையில் முதல்வகுப்பு வசதி கேட்கும் உரிமை உள்ளது.

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டால் இந்த வசதி கிடைக்காது.

இது இந்திய அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள சலுகை. சீமான் வருமான வரி கட்டுபவர் தானே? அதனால் முதல்வகுப்பு கேட்பதில் என்ன தவறு உள்ளதென நினைக்கிறீங்க நீங்க?

இலங்கைத் தமிழர்களுக்காக போராடுவது அவரது உணர்வு ( you may give some different reasons,thats not a point here).

சிறையில் முதல்வகுப்பு என்பது அவருக்கு சட்டபடி உள்ள உரிமை. இதில் இலங்கைத் தமிழர்களுக்காக போராடுபவர்கள் என்பதால் அந்த உரிமைய குடுக்க கூடாதுன்னு சொல்றிங்களா? இல்ல அவங்க அந்த உரிமையையும் விட்டுக்கொடுக்கனும்னு சொல்றிங்களா?

SanjaiGandhi™ said...

mrradha, இங்க தமிழ் உணர்வாளர்கள் என்று சொலித் திரியும் பித்தலாட்டக்காரர்கள் பற்றி எல்லாம் நீங்க எனக்கு வகுப்பெடுக்க வேண்டாம்.. ஆட்டு மந்தை கூட்டத்திலேயே நீங்க இருங்க.. அது என் பிரச்சனை இல்லை. தமிழ் உணர்வாளர்களாம்.. அவர்களை நக்கலடிக்கும் அரிப்பாம்.. தமிழ் உணர்வு என்றால் என்ன என்று யார்கிட்டயாச்சும் தெரிஞ்சிட்டு வந்து இங்க வாந்தி எடுங்க.. சகிக்கல..

ஜோசப்,
முதல்வகுப்புப் பற்றி நீங்கள் சொல்லி இருப்பதை நானும் அறிவேன். வெளியில் சீமான் பேசுவதற்கும் சிறையில் முதல் வகுப்புக் கொடுக்கவில்லை என்பதற்காக கோர்ட் படியேறியதற்கும் ஏக வித்தியாசம் இருக்கு. அதைத்தான் கிண்டல் செய்தேன். அவருக்கு முதல் வகுப்புக் கொடுப்பதை பற்றி எனக்கொன்றும் கவலை இல்லை.

இலைங்கத் தமிழர்களுக்காக போராடுவதற்காக என்பதெல்லாம் இங்கே குறிப்பிட வேண்டியதில்லை ஜோசப். அவர் பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை தான் கிண்டலிடித்திருக்கிறேன்.

இலங்கைத் தமிழர்கள் மட்டுமில்லை, உலகில் தங்கள் உரிமைக்காக நியாயமாக போராடும் அனைவருமே நம் தோழர்கள் தான். அதை விடுங்க.

இலங்கையில் போர் உக்கிரமாக நடைபெற்ற போது, போருக்கு எதிராய் ஒட்டு மொத்த தமிழகமும் குரல் கொடுத்து ஒன்று திரண்ட போது, தனித் தமிழ்நாடு உருவாகும் என வைகோவும் இருக்கிறவனை எல்லாம் வேசிமக்கள் என சொல்லி இந்த வெங்காயம் சீமானும் தான் அந்த ஆதரவைக் கெடுத்தவர்கள். இவர்களா இலங்கைத் தமிழர்களுக்காக போராடுகிறார்கள்? இவர்கள் அரசியல் வியாபாரிகள்.. அரசியல் விளம்பரப் பிரியர்கள்.

இலைங்கத் தமிழர்களை வைத்து அரசியல் லாபம் சம்பாதித்தவர்கள். போரின் முடிவுக்குப் பின் இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு-----யும் புடுங்கிப் போடவில்லை. ஏன்னா, புலிகளின் அழிவுக்குப் பின் இவர்களுக்கான நிஜ லாபல் இல்லை. இந்தப் பித்தலாட்ட கும்பலை எப்போதும் எதிர்ப்பேன்.

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget