நம்பிக்கை நட்சத்திரம் ஜோதிமணி

''அமராவதி ஆற்றங்கரையின் ஒரு கிராமத்துல பிறந்த நான், தேசிய அரசியலை எட்டிப்பிடிப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. இன்னிக்கு நான் இந்தியத் தலைநகர் டெல்லியில் இளைஞர் காங்கிரஸின் தேசியச் செயலாளராக இயங்குகிறேன். ஆனால், அதைவிட என் சொந்தக் கிராமத்துல 15 வருஷமா குடிக்கத் தண்ணி இல்லாம தவிச்ச தலித் மக்களுக்காகப் போராடி, குடிதண்ணீர் வாங்கித் தந்ததுதான் என் மனசுக்கு நிறைவளிக்கும் விஷயம்!''- படபடவெனப் பேசுகிறார் ஜோதிமணி. இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியச் செயலாளர்களில் ஒருவர். அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்பும் இத் தலைமுறை இளைஞர்களைப்போல் அல்லாமல், நேரடி அரசியலில் இயங்கும் ஜோதி, ஓர் எழுத்தாளர். தனது கிராமத்தில் நடத்திய தண்ணீர் போராட்டத்தை 'நீர் பிறக்கும் முன்' என்ற தலைப்பில் புத்தகமாகவும் எழுதியிருக்கிறார்.

''கரூர் மாவட்டம் பெரிய திருமங்களம்தான் நான் பிறந்த கிராமம். அப்பா விவசாயி. பொருளாதாரரீதியாக கஷ்டம் இல்லாத குடும்பம்தான். படிப்பில் ஆர்வம் உண்டு. எப்பவும் நான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் தான். உடுமலைப்பேட்டை கல்லூரியில் படிக்கும்போது போட்டியே இல்லாமல் கல்லூரித் தேர்தலில் ஸ்டூடன்ட் செகரெட்டரி ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்.எஸ்.எஸ். கேம்ப்புக்காகப் போனப்ப சாதாரண மக்களோடு தங்கி, அவங்ககூடவே சாப்பிட்டு, வேலை பார்த்துக் கழித்த சில நாட்கள் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு. அடுத்த முறை எங்க ஊருக்கு வந்தப்போ, ஊரே எனக்குப் புதுசாத் தெரிஞ்சது.

எங்க கிராமத்தோட தலித் மக்கள் 15 வருஷமா அவங்க காலனிக்குக் குடிதண்ணீர் குழாய் கொண்டுவரணும்னு போராடிட்டு இருந்தாங்க. ஒரே ஒரு குழாய்கூட இல்லாம பல கி.மீ. நடந்து போய் தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை. அவங்களுக்கு பைப் கனெக்ஷன் கொடுப்பதால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது. ஆனாலும், யாருக்கும் தண்ணீர் கொடுக்க மனசு வரலை. 'சரி, நம்மால் என்ன பண்ண முடியும்?'னு யோசிச்சப்பதான் 'இந்தப் பிரச்னையைத் தீர்க்க கையில் அதிகாரம் அவசியம்'னு புரிஞ்சது. அந்த வயசுக்கு 'அதிகாரம் கையில வந்தா, நாமளும் ஒரு எம்.ஜி.ஆர். மாதிரி ஆயிடலாம்'ங்கிற அளவுக்குக் கற்பனை. 'உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போறேன்'னு சொன்னதும், வீட்ல பயங்கர எதிர்ப்பு. சொந்தக்காரங்க எல்லாம் ஷிஃப்ட் போட்டு அறிவுரை சொன்னாங்க. 'நல்ல குடும்பத்துப் பொண்ணுங்களுக்கு அரசியல் எதுக்கு?'கிற கேள்வியை ஒரு நாளைக்கு 100 தடவை என் காதால் கேட்டேன். ஆனாலும், என் முடிவில் கடைசி வரைக்கும் உறுதியா இருந்தேன். 5,000 ஓட்டுக்கள்கொண்ட ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் பண்ணேன்.

மக்களிடம் பேசினால், 'நீ இல்ல, உங்க ஊர்லேர்ந்து எவன் நின்னாலும் ஓட்டு போட மாட்டோம்'னு கறாராச் சொன்னாங்க. தினம் தினம் மக்களோடு பேசுவேன். தீர்வு அப்புறம், அவங்களோட பிரச்னையைக் கேட்கவே ஆள் இல்லைங்கிற உண்மை புரிஞ்சது. கடைசியில வீடு, சொந்தக்காரங்க எல்லாரும் எனக்காகத் தேர்தல் வேலை பார்க்க முன் வந்தாங்க. 'நான் அஞ்சு ஆயிரம்தான் செலவு பண்ணுவேன். சாராயம் வாங்கித் தர்றது, பணம் தர்றது எல்லாம் பண்ண மாட்டேன்'னு சொல்லிட்டேன். தேர்தல் முடிஞ்சு முடிவு வந்தது. நான் ஜெயிச்சேன்.

ஆனா, ஜெயிச்சு எட்டு மாசம் வரைக்கும் என்னால் எதுவுமே பண்ண முடியலை. தாசில்தார் ஆபீஸ்ல என்கிட்ட எதாவது பொய் சொல்லி ஏமாத்துவாங்க. உள்ளூர் தலித் மக்கள், 'என்னமோ தண்ணீர் கொண்டுவர்றேன்னா... ஒண்ணுத்தையும் காணோம்'னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அதிகாரம் மட்டுமே எதையும் சாதிக்காதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஒவ்வொரு நாளும் தாசில்தார் ஆபீஸ் போய் சண்டை போட்டு, போராட்டம் நடத்தி, மனு போட்டு, பல ஊழல்களைக் கடந்து பைப் லைன் கொண்டுவர மூன்றரை வருஷமாச்சு. தண்ணீர் வந்த முதல் நாள் அழுகையும் மகிழ்ச்சியுமா ஒரு சினிமாபோல இருந்தது. அதுக்குப் பிறகு என்னோட ஒன்றியக் கவுன்சிலுக்கு உட்பட்ட மத்த கிராமங்களின் தலித் குடியிருப்புகளுக்கும் குடி தண்ணீர் பைப்லைன் போட்டாங்க.


அடுத்த தடவையும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிச்சேன். அந்தச் சமயத்தில் அமராவதி ஆற்றில் அரசாங்கம் மணல் அள்ளத் திட்டம் போட்டுச்சு. 'அரசு எடுத்தாலும், தனியார் எடுத்தாலும் ஆத்துல மணல் எடுக்குறது எங்க விவசாயத்தைப் பாதிக்கும்'னு சொல்லி, மக்களைத் திரட்டிப் போராடி, அந்த பொக்லைன் இயந்திரத் தைத் தடுத்தோம். பிறகு, நானே கோர்ட்டில் கேஸ் போட்டு, அமராவதி ஆற்றில் மணல் அள்ள நிரந்தரத் தடை ஆணை வாங்கினேன். இப்போ வரை எங்க ஊர் ஆத்துல யாரும் மணல் அள்ளுறதில்லை.

ஆரம்பம் முதலே எனக்கு காந்தியக் கொள்கைகள் மேல ஈர்ப்பு உண்டு. நான் முதல் தடவை தேர்தலில் போட்டியிடும்போதே தமிழ் மாநில காங்கிரஸோட வேட்பாளர்தான். அடுத்த தடவையும் த.மா.கா-வில் நின்னுதான் ஜெயிச்சேன். மூன்றாவது முறையா போட்டியிட்டப்போ, மணல் கொள்ளை நடத்தினவங்க உள்பட சகலரும் எனக்கு எதிரா ஒண்ணு சேர்ந்துட்டாங்க. நான் தேர்தலில் தோற்றேன். ஆனா, நான் எந்தக் காலத்திலும் பதவிதான் அரசியல்னு நினைச்சது இல்லை. நான் த.மா.கா-வில் இருந்த சமயத்திலேயே எனக்கு ப.சிதம்பரத்தைத் தெரியும். 'சின்னப் பொண்ணு'தானேன்னு நினைக்காம, நான் சொல்ற விஷயங்களையும் காது கொடுத்துக் கேட்பார். அவர் வழிகாட்டுதல் இல்லைன்னா, நான் என்னிக்கோ அரசியலில் இருந்து வெளியேறி இருப்பேன். 2001-ல் அவர் த.மா.கா-வில் இருந்து வெளியேறி 'காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை'யை ஆரம்பிச்சப்போ என்னை கரூர் மாவட்டச் செயலாளரா நியமிச்சார். 25 வயசுல ஒரு கட்சிக்கு மாவட்டச் செயலாளரா இருந்ததை இன்னிக்கு நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கு.


2006-ல் இளைஞர் காங்கிரசுக்குள்ள வந்தேன். இரண்டு வருஷம் பரபரப்பான இளைஞர் காங்கிரஸ் பணிகள். மாநிலத் துணைத் தலைவரா இருந்தேன். அப்போதான் ராகுல்ஜி இந்திய யூத் காங்கிரஸின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஹைதராபாத்தில் ஒரு மீட்டிங். ஆந்திராவின் தலித் குடியிருப்புகளில் சில நாட்கள் தங்கி அந்த அனுபவங்களைப் பேசணும். இதற்காக நாடு முழுக்க 1,800 பேர் அழைக்கப்பட்டு இருந்தாங்க. ராகுல்ஜி முன்னிலையில் நடந்த அந்த மாநாட்டில் பேசிய 17 பேரில் நானும் ஒரு ஆள். அதன் பிறகு, ஐந்து எம்.பி-க்கள்கொண்ட குழு நாடு முழுவதும் இருந்த யூத் காங்கிரஸ் பொறுப் பாளர்களிடம் டேலன்ட் டெஸ்ட் நடத்தியது. என் முறை வந்தபோது 'ஜோதிக்கு டெஸ்ட் வேண்டாம். அவங்க டேலன்ட்தான் நமக்குத் தெரியுமே' என்று நேரடியாக என்னைத்தேர்ந் தெடுத்தார் ராகுல். அப்படித் தேர்ந்தெடுக் கப்பட்ட 22 பேரை இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியச் செயலாளர்கள் ஆக்கி னார்கள். இந்த 22 பேர் கமிட்டிதான் இளைஞர் காங்கிரஸின் அகில இந்தியத் தலைமை நிர்வாக அமைப்பு. அதில் தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக நான்.

எங்கள் கிராமத்தில் சதாசிவம் என்றொரு எம்.எல்.ஏ. இருந்தார். மூன்று முறை எல்.எல்.ஏ-வாக இருந்த அவர், வாழும் காலம் வரை ஊழல் இல்லாமலும் எளிமையாகவும் வாழ்ந்தார். அவர்தான் எனக்கான அரசியல் முன்னோடி. 'நான் ஜோதி ஆனது எப்படி?' என்ற கேள்விக்கு 'சதாசிவம் ஐயா' என்ற ஒரு வார்த்தை பதில்தான் மிகப் பொருத்தம். அரசியலை இன்றைய இளைய தலைமுறை வெறுக்கிறது. ஆர்வம் காட்ட மறுக்கிறது. அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். வீட்டைச் சுத்தப்படுத்துவதும், வீதியைச் சுத்தப்படுத்துவதும், நாட்டைச் சுத்தப்படுத்துவதும் நம் கடமை. நான் என் வீடு தாண்டி வீதியையும் சுத்தப்படுத்த விரும்பினேன். விருப்பம் இருந்தால் வாருங்கள், ஊழல் இல்லாத ஓர் உலகத்தை உருவாக்குவோம்!''

நன்றி : பாரதிதம்பி & ஆனந்தவிகடன் 

டிஸ்கி : ஜோதிமணி தற்போது கேரள இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராகவும் அஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

Read more...

நில்.. கவனி.. செல்..

  • இந்தியாவில் தீவிரவாதம், இயற்கை பேரழிவுகள் போன்றவற்றைக் காட்டிலும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவது சாலை விபத்துகளே..
  • ஒவ்வொரு மணி நேரமும் 13 பேர் இந்தியாவில் சாலை விபத்தில் மரணமடைகிறார்கள். இது உலக அளவில் மிக அதிகம்.
  • உலக அளவில் சாலைவிபத்தில் மரணமடையும் 10 பேரில் ஒருவர் இந்தியர்.
  • தினமும் சுமார் 250 பேர் சாலை விபத்தில் மரணமடைகிறார்கள்.
  • இவர்களில் 85 சதவீதம் பேர் ஆண்கள். 70 சதவீதம் பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள். சம்பாத்தித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கடமையில் இருப்பவர்கள்.
  • குடிபோதையில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களால் 29 சதவீத விபத்து மரணங்கள் நடைபெறுகின்றன.
  • ஹெல்மெட் அணிவதன் மூலம் 40 சதவீத பாதிப்பையும், காரில் சீட் பெல்ட் அணிவதால் 50 சதவீத விபத்து பாதிப்பையும் தடுக்க முடியும்.
  • சாலை விதிகளை மீறுவதன் மூலமே 80 சதவீத விபத்துகள் நடைபெறுகின்றன.
ஆகவே சாலை விதிகளை கடைபிடிப்போம்.. அதிவேகமாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்போம்.. குடி போதையில் வாகனம் ஓட்டாதீர்கள்.. செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம்.. உங்களை நம்பி குடும்பம் இருக்கிறது.. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதை தவறாமல் கடைபிடிப்போம்.. சாலை விபத்தை தவிர்ப்போம்..

டிஸ்கி:  இயற்கை ராஜி அழைப்பின் பேரில் ஒரு தொடர் பதிவு.. விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்களும் பதிவிடுங்கள்..

Read more...

இனி வரப் போகும் பதிவர்களின் புத்தகங்கள் விவரம்


பிரபலப் பதிவர்கள் சிலர் ஏற்கனவே புத்தகம் வெளியிட்டிருக்கும் நிலையில் மேலும் சில பிரபலப் பதிவர்களும் புத்தகம் வெளியிடும் முயற்சியில் இருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. புலனாய்வு செய்ததில் அவர்களில் புத்தகங்களின் பெயர்கள் தெரிந்துக் கொள்ள முடிந்தது. அதன் விவரம்..

நசுங்காத சொம்பும் நச்சினு சில தீர்ப்புகளும்
- வடகரை வேலன்

பார்வை மாற்றமும் கலர்கண்ணாடிகளும் சுனாதினாவும்
- குசும்பன்

அழுவாச்சிக் காவியம்
- காயத்ரி சித்தார்த்

பப்புவின் ஆப்பும் தினம் தினம் ”ஙே”வும்
 - சந்தனமுல்லை

பப்லுவின் க்ளாஸ் மிஸ்களும் ஏழுவின் காதல் லீலைகளும்
 - கார்க்கி

பொண்டாட்டி ராஜ்ஜியமும் சில புலம்பல்களும்
- ஆதி தாமிரா

பாரதியின் ரௌத்திரமும் ரெண்டு ப்ளேட் ரத்தப் பொரியலும்
- கலகலப்ப்ரியா

 தம்பித் தங்கக் கம்பி
 - புதுகை அப்துல்லா

இலவச பூங்கொத்தனார்
 - அன்புடன் அருணா

கல்யாணராமன்
  - அதிஷா

அண்ணனுக்கு ஜே - ஆட்டையைப் போட சில கவிதைகள்
 - இயற்கை மகள்

வாலும் கோளும்
 - வால்பையன்

கல்யாணம் பண்ணிப்பார்.. பதிவெழுதிப்பார்
 - மங்களூர் சிவா

தினமலரும் தினம் ஒரு பதிவும் for Dummies 
- கோவி. கண்ணன்

மல்லு ஆண்டி மைனர்
 - ஆயில்யன்

மானிட்டர் கவிதைகளும் மசால் போண்டாவும்
 - தண்டோரா

இட்லி பூரி பொங்கலும் கெட்டிச் சட்னியும் கொஞ்சம் சில்லறையும் மறுபிறவியும் கொஞ்சூண்டு பெரிய பதிவுகளும்
- உண்மைத்தமிழன்

பாமகவை திட்டுவது போல் நடிப்பது எப்படி?
- குழலி

எழுதுவதெல்லாம் கவிதையே
- ஜ்யோவ்ரம் சுந்தர்

சுமாரான பிகரும் சூப்பர் பிகரின் அலப்பறையும்
- சின்ன அம்மினி

நீங்களும் புனைவு எழுதலாம்
- நிஜமா நல்லவன்

வாங்க  அட்வைசர் ஆகலாம்
- புதுகைத் தென்றல்

Last.. but not least..

30 நாளில் படம் வரைந்து பாகம் குறிப்பது எப்படி? ஒரு அனுபவக் குறிப்பு ( இது அது அல்ல)
- கணேஷ் பக்கங்கள் ”சியாமளா” கணேஷ்

டிஸ்கி: இது யாரையும் புண்படுத்த அல்ல.. தவறாக இருப்பின் மன்னித்து சுட்டிகாட்டவும்..நீங்களும் மற்ற ரவுடிகளை ஜீப்பில் ஏற்றுங்கள்..

Read more...

Mini Meals v 5.02

திஷாவாக அவதாரம் எடுத்து உங்களுக்கெல்லாம் அறிமுகம் ஆகும் முன்பு வினோத்குமாராகவே இவர் எனக்கு நண்பன். அதிஷா என்ற பெயரில் யாரோ எழுதுகிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் வால்பையன், அதிஷாவுடன் சாட்டில் பேசியதை அவர் வலைப்பூவில் வெளியிட்டார். அதில் அதிஷாவின் மின்னஞ்சல் முகவரி பார்த்து தான், அட இது நம்ம வினோத்தாச்சே என தெரிந்துக் கொண்டேன். கடந்த ஞாயிறன்று இருவரும் சென்னையிலில் இருந்து ஒன்றாய் பயணித்து கோவை வந்தோம். அப்போது அவர் பையில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்தேன். பெயர்களைப் படிக்கும் போதே கண்ணைக் கட்டியது. பயபுள்ள ஏன் ஒரு மார்க்கமா இருக்குன்னு அப்போ தான் தெரிஞ்சது. சரி விஷயம் அதில்லை. நம் நண்பன் அதிஷா @ வினோத்குமாருக்கு நாளை மறுநாள் ( 18.02.2010 ) வியாழக்கிழமை அன்று கோவையில் திருமணம் நடைபெறுகிறது. வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ நண்பனை வாழ்த்துகிறேன்.

கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறப் போவதை அனைவரும் அறிவீர்கள். தினம் தினம் செய்தி அறிக்கைகள் பார்த்தால் தான் எங்களுக்கும் நினைவுவரும். கோவையில் அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. யாரோ ஒரு புண்ணியவான் தகவல் அறியும் உரிமை சட்டப் படி , செம்மொழி மாநாட்டிற்கு ஒதுக்கீடு செய்திருக்கும் நிதி விவரம் கேட்டிருக்கிறார். உதட்டைப் பிதுக்கியபடி பதில் வந்திருக்கிறது. அவர் கோவையில் எங்களைக் கேட்டிருக்கலாம். பிம்பிலிக்கி பிலாப்பி.. மாமா பிஸ்கோத்துன்னு நாங்களே சொல்லி இருப்போம். இன்னும் மின்சார வசதி சீரடையவில்லை. தினம் இரண்டு  மணி நேரக் கட்டாய மின் தடை இல்லாமல் அவ்வப்போது சில பல மணிநேரங்கள் மின்தடை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சிறு கோளாறுகளைக் கூட உடனடியாக சரி செய்வதில்லை. செம்மொழி மாநாட்டின் போது இன்னும் என்ன எல்லாம் அரங்கெறப் போகுதோ..

ரிசல்காரன் மற்றும் கேபிள் சங்கரின் புத்தக வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது. நண்பர்களுடன் சென்று வந்தது இனிமையான அனுபவம். கார்க்கி எங்கள் உடன் இருந்து மிக நன்றாய் கவனித்துக் கொண்டார்.என் மாமன் அப்துல்லா தன் வீட்டில் தங்கவைத்து மிகச் சிறப்பாய் உபசரித்தார். நிகழ்ச்சியின் போது ஏராளமான நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. வழக்கம் போலவே முதல் முறை சந்திப்பது போலன்றி மிக இயல்பாய் சென்னைக்காரர்கள் பழகினார்கள். இரண்டு எழுத்தாளர்களிடமும் புத்தகமும் ஆட்டோகிராபும் வாங்கிக்கொண்டேன். நண்பர் சுரேகா அற்புதமாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். என் பின்னூட்டங்களைப் பார்த்து டரியலாகி என் ப்ளாகை படிக்கவே பயமாக இருப்பதாக இரண்டு அப்பாவிகள் சொன்னதைக் கேட்டு, கவுஜாயினி காயத்ரி கவிதை படிக்காமலே எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வந்துச்சி.. குசும்பா கவனிக்க. நானும் ரவுடிதாம்லே.. கும்மி எல்லாம் கொறைச்சிக்கனும்.. :). அன் மூஞ்சியைப் பார்ந்த சில வினாடிகளிலேயே, இனி தினம் வந்து உங்களுக்கு 10 கமெண்ட் போட்டு கும்முறது தான் எங்கள் வேலை என்றும் அதே வாய்கள் சொல்லின. எப்டித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ..


ழக்கமாக, வெங்கட்ப்ரபு அண்ட் கோவின் படம் திரைக்கு வரும் போது இவர்களின் பந்தாவிற்கு அளவே இருக்காது. எல்லா சேனல்களிலும் கும்பல் கும்பலாக வந்து தங்களின் உலகத் தரம் வாய்ந்த திரைப்படத்தின் மேக்கிங் ஆஃப் ஜிம்பலக்கா ஜும்பாலே என்று மொக்கைப் போட்டுத் தள்ளிவிடுவார்கள். உலக சாதனைகள் படைக்கும் ஜேம்ஸ் காமரூன் அணிகள் கூட இவ்வளவு பேச மாட்டார்கள். ஆனால் இவர்கள் அலப்பறை தாங்காது. அதில் இந்த ப்ரேம்ஜியின் டார்ச்சர்.. அப்பப்பா சொல்லி மாளாது.. எல்லாப் படத்திலும் ஒரே மாதிரி வசனங்கள் தான். அதுவாச்சும் புதுசா என்றால் இல்லை.. என்னக் கொடுமை சார் இது என்று இன்னும் எத்தனைப் படங்களில் சாவடிப்பாரோ?. எனினும் கோவாப் படத்திற்கு பெரிய சீன் எதுவும் போடவில்லை. அடக்கியே வாசித்தார்கள். படம் அந்த அளவிற்கு ஊத்திக் கொண்டது. கோவா என்றால் ஊற்றிக் கொள்ள வேண்டுமே. ரொம்ப அடக்கி வாசிக்கிறார்களே திருந்திவிட்டார்கள் போலும் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே கோவை U டிவியில் ப்ரேம்ஜி அண்ட் கோ கும்பலாய் வந்து பிப்ரவர் 14ஆம் தேதி எங்களை சந்திக்கப் போவதாக பயமுறுத்தினார்கள். அடப்பாவிகளா.. இங்கயும் வந்துட்டிங்களா.. நல்ல வேளை நான் அன்று சென்னையில் இருந்ததால் உயிர் பிழைத்தேன்.


புகழ்பெற்ற தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் & எழுத்தாளர் அலெக்ஸ் கிர்க், ஒரு வார்த்தைக் கூட பேசாமல் ஒரு வாரம் மௌணமாக வாழ்ந்திருக்கிறார். உலகிலேயே மிகவும் அதிகம் பேசுபவர் தான் தான் என சொல்லிக் கொள்ளும் கிர்க், ஒருவாரம் பேசாமல் இருக்க முடிவு செய்து அதை சாதித்திருக்கிறார். தன் காதலியுடன் பேசாமல், தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லாமல் சைகையிலும் காகிதத்தில் எழுதிக் காட்டியுமே சமாளித்திருக்கிறார். இரவு உணவுக்கு காளான் சமைக்க கடைக்கு சென்று காளான் வேண்டும் என ஒரு காகிதத்தில் எழுதிக் காட்டி இருக்கிறார். அதைப் படித்த அந்த கடை பணிபெண் இவரைப் பரிதாபமாகப் பார்த்திருக்கிறார். தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் ஒரு காதலி கூட இருக்கிறார் என சொல்ல நினைத்தும் சொல்ல முடியலையேப்பாஆஆஆ என சிவாஜி பாணியில் மனதுக்குள் குலுங்கிக் குலுங்கிப் புலம்பி இருக்கிறார். எங்க உண்மைத்தமிழன் அண்ணன் இவ்வளவு நாள் பதிவெழுதாமல் இருக்கும் சாதனை விடவா அலெக்ஸ் கிர்க்கின் சாதனை பெரிது? போங்கய்யா போங்க.. :)

ராகுல்காந்தியின் அரசியல் பிரவேசம் நிர்பந்தத்தால் நிகழ்ந்ததாக இருப்பினும் அதை மிகச் சிறப்பாக செய்கிறார். நியமனங்கள், ஜால்றாக்கள், வயோதிகர்கள் போன்றவற்றால் புரயோடிக் கிடந்த கட்சி அமைப்புகளுக்கு புது ரத்தம் பாய்ச்சுகிறார். இளைஞர்களைத் தேடித்தேடி சந்திக்கிறார். அவர்களை அரசியலுக்கு அழைக்கிறார். மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரசுக்கு நியமன முறையை ஒழித்து தேர்தல் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கப் போவதாக சொன்னதுடன் அதை நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறார். தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்கு தன்னார்வ அமைப்புகள் மூலம் பயிற்சி அளிக்கப் படும் என அறிவித்தார் ராகுல்காந்தி. இப்போது பாண்டிச்சேரியில் பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நம் பதிவர் ஒருவரும் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் தன்னார்வ அமைப்பு ஒன்றும் இந்தப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு, அவரும் பாண்டிச்சேரியில் இப்போது பயிற்சி வகுப்பில் இருக்கிறார். இந்திய அரசியலில் பயிற்சி பெற்ற, ஆக்கப் பூர்வமாக சிந்திக்கும் இளைஞர்களின் ஆதிக்கம் வெகு விரைவில் நடக்கும். இதற்காக ராகுல்காந்திக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

மீபமாக வந்த திரைப் பாடல்களில் சில பாடல்களில் என்னை அதிகம் கவர்ந்திருக்கின்றன. அதில் முதல் இடம் ஓடிபோலாமா என்ற படத்தில் டி.இமான் இசையில் இடம் பெற்றிருக்கும் வாலுபையனே பாடல். அனிதாவின் குரலும் வரிகளும் அசத்தல். அடுத்து, ஆயிரத்தில் ஒருவனின் “உன் மேல ஆச தான்” பாடல். தனுஷின் தெனாவெட்டு குரலும் ஆண்ட்ரியாவின் மயக்கும் குரலும் கலக்கல். முந்தினம் பார்த்தேன் படத்தின் பேசும் பூவே பாடலின் இடையில் வரும் வரிகள் ரொம்ப நல்லா இருக்குங்க.. கேட்டுப் பாருங்க.. அப்டியே பையாவில் நா.முத்துக்குமாரின் வரிகளின் துளித்துளி மழையாய்.. அழகாய் மனதைப் பறித்துவிட்டாயே.. :).

Read more...

Happy Birthday Deeksha

எங்கள் குடும்பத்தின் தற்போதைய தலைமுறையின் கடைசி வாரிசு.. எங்க வீட்டு இளவரசி இனியா @ தீக்‌ஷா. ஆதித்யனின்( இவள் அண்ணன்) பிறந்தநாள் பொங்கல் விடுமுறையில் அமைந்துவிட்டதால், ஒவ்வொரு ஆண்டும் எங்கள் ஊரில் சொந்தம் பந்தம் புடை சூழ எளிமையாகவும் சிறப்பாகவும் கொண்டாடுவோம். தீக்‌ஷாவின் பிறந்தநாள் பிப்ரவரியில் வருவது அவளுக்கு பெரிய வருத்தம். ஆதிக்கு மட்டும் இவ்ளோ பெரிசா செலிப்ரேட் பண்றிங்க, எனக்கு மட்டும் இப்டி பண்றதே இல்லைனு சண்டை போட்டுட்டே இருக்கா. ஊரில் கொண்டாடுவது போல் சென்னையில் கொண்டாட இயலுவதில்லை. ஆனாலும் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் தீக்‌ஷா தான் செல்லம். எங்கள் செல்லம் என்றும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ இந்த அண்ணன் வாழ்த்துகிறான். உங்கள் ஆசிகளும் வழங்குங்கள்..

Happy Birthday Deeksha
with love
Sanjai Gandhi

Read more...

Mini Meals v 4.02.10

ந்த வார ஆரம்பத்தின் ஒரு முன்மாலைப் பொழுதில் கோவை மாநகராட்சியில் 20 சொச்சம் கருத்தரங்கு அறைகளில் எதோ ஒன்றில் சில பெரும்புள்ளிகளுடன் சிறு புள்ளியாய் நானும் எதிரில் சில அதிகாரிகளுமாய், ஆணையர் திரு. அன்சுல் மிஷ்ராவுக்காக காத்திருந்த இடைவேளையில் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது என் அருகில் இருந்த ஒருவர் தன் அலுவலகம் இருக்கும் பகுதியின் பெயரை சொன்னதும் எதிரில் இருந்த அலுவலர் ஒருவர் இடைமறித்தார்.

”லக்‌ஷ்மிபுரத்துல எந்த இடம்ங்க?”
“அந்த பாலத்துக்கு பக்கம் லெஃப்ட்ல ஒரு ரோடு போகுமே அங்க சார்”
“ஒரு மளிகைடை இருக்குமே. அங்கயா?”
“இன்னும் கொஞ்சம் மேல வாங்க” ( கையை உயர்த்திக்காட்டினார்)
“ஆமா.. கொஞ்ச தூரத்துல ஒரு டீக் கடை இருக்கும். என் வீடும் அங்க தான் இருக்கு”
“ஓ. நாங்க ஒரு TWAD போர்ட் இஞ்சினியர் வீட்ல கீழ வாடகைக்கு எடுத்திருக்கோம் சார்”
“அப்டியா?. வீட்டு நம்பர் என்ன?
“15B”
“15Bயா? 16Bயா?
"சாரி சார்.. 16B தான்.. அந்த வீடு தெரியுங்களா?”
“அந்த வீடே என்னோடது தானுங்க..TWAD போர்ட் இஞ்சினியர் இல்லை.. கார்பரேஷன் இஞ்சினியர். மாடியில் தான் குடி இருக்கிறேன். ஆனா உங்கள பார்த்ததில்லை பாருங்க”
என் அருகில் இருந்தவர்கள் சிரித்து முடிக்க நீண்ட நேரம் ஆகியது.அந்த நபருக்கு ஆச்சர்யம்.. இது வரை இருவரும் சந்தித்துக் கொண்டதே இல்லையாம். வீட்டம்மாவிடம் தான் வாடகை தருகிறாராம். அதனால் வீட்டய்யாவை பார்த்ததில்லையாம்.. இது எப்டி இருக்கு.. :)

கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஷ்ரா மிகவும் எளிமையாகவும் நட்பாகவும் பழகுகிறார். நேர்மையானவரும் கூட. மிக அழகான தமிழில் பேசுகிறார். தமிழ் அதிகாரிகளைப் போல் ஆங்கிலத்தில் பேசி டரியல் ஆக்குவதில்லை. அதே போல் கோவை மாநகர காவல்துறை ஆணையர் திரு.சிவணாண்டி மிக சிறப்பாக செயல்படுகிறார். குயர் கணக்கில் பேப்பரும் பான்பராக்கும் மசால்வடையும் வாங்கித் தர வேண்டிய அவசியம் இல்லாமல், முதன் முறையாக, தொலைபேசியில் புகார் அளித்தாலே போதும் FIRவீடு தேடி வரும் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டினார். ஹெல்மெட் அணிவதை தீவிரப் படுத்தினார். பணியில் இருக்கும் போது காவலர்கள் அலை பேசியை உபயோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே , யாராவது பேருந்துகளில் படியில் பயணம் செய்தால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறார். நேற்று மாநகர பேருந்தில் பயணம் செய்த போது படியில் நிற்க நடத்துனர், யாரையும் அனுமதிக்கவில்லை. நல்ல கமிஷனர் தான்.

 ப்போதெல்லாம் கோவையில் அநேக இடங்களில் பெரும் ஃப்ளக்ஸ் பேனர்களில் அஞ்சா நெஞ்சன் அழகிரி ஓயாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார். நேற்று பொள்ளாச்சியிலும் அவரின் பிரமாண்ட சிரிப்பை தரிசிக்க நேர்ந்தது. அழகிரியார் தெற்கில் மட்டுமில்லாமல் தமிழகம் முழுதும் பரவிக்கொண்டிருக்கிறார். சுடாலினார்(நன்றி TBCD) உஷாராக இருக்க வேண்டும். உருண்டு திரண்டு வரும் கரும் மேகம் சூரியனையே மறைக்கும். நிலா எம்மாத்திரம்?. அரசியல்வாதிகளுக்கு இணையாக ஆன்மிக வியாபாரிகளும் களத்தில் குதித்துவிட்டார்கள். எங்கெங்கு நோக்கினும் ஜக்கியும் நித்தியும் பிரமாண்டமாக புன்னகைக்கிறார்கள். சில பால்கள் சித்து வேலைகள் காட்ட மைதாணம் நோக்கி பெரு வாரியாக அழைக்கிறார்கள். அரசியல்வாதிகளைப் போல் ஆன்மிக வியாபாரிகளுக்கும் தொண்டரடிபொடிகள் அதிகரித்து விட்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு பேனர் கட்டுகிறார்கள் கடவுளின் ஏஜெண்டுகளின் கடைக்கண் பார்வைக்கு.. நல்லா இருங்க ராசாக்களா..

தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரும் இண்டர்நெட் நிறுவனம் telkom. இதன் மோசமான சேவையில் கடுப்பான ஒரு IT நிறுவன பணியாளர் புறாவின் மூலம் தகவல் அனுப்ப முடிவு செய்திருக்கிறார். அதன் படி 4GB மெமரி ஸ்டிக்கை ஒரு புறாவின் காலில் கட்டி 85கிமி தொலைவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறார். அந்தப் புறாவும் சமர்த்தாக அந்த நிறுவனத்திற்கு சென்று மெமரிஸ்டிக்கை ஒப்படைத்துவிட்டது. அதில் இருந்த டேட்டாவை அந்த நிறுவனத்தினர் தங்கள் கணினியில் ஏற்றிவிட்டார்கள். இதற்காக ஆன காலம் 2 மணி நேரம் மட்டுமே. இந்த 2 மணி நேரத்தில் telkomன் அதிவேக இணைப்பின் மூலம் இதே தகவல் 4% மட்டுமே அப்லோட் ஆகி இருந்ததாம். இது எப்டி இருக்கு? :))

சில வணிக விசாரணைகளுக்காக Tradeindia இணையதளத்தில் மேய்ந்துக் கொண்டிருக்கும் போது ஒரு நிறுவனமும் அதன் அலுவலக விலாசமும் கண்ணில்பட்டது.இது காய்கறிகள் ஏற்றுமதி நிறுவனம். MLA ஹாஸ்டல்ல தங்கறவங்க தான் பெரும் வணிகர்கள் என்று பார்த்தால், ஹாஸ்டலே கமர்சியல் காம்ப்ளக்ஸ் போல் தான் செயல்படுகிறது போலும்.

ANBU INTERNATIONAL
No. C/6A, MLA Quarters,
Government Estate,
Chennai - 600002, Tamil Nadu, India

Key Personnel
Mr. J. Karunanithi (Proprietor)

இதெப்டி இருக்கு?


திர் வரும் ஞாயிறுக் கிழமை, சென்னையில் பிரமாண்டமான கேபிள்சங்கர் எழுதிய புத்தகமும் திருப்பூர் திலகம் பரிசல்காரன் எழுதிய புத்தகமும் வெளியிடப்படுகிறது.பரிசல் மாமனின் அன்பான அழைப்பை ஏற்று சென்னை வந்து விழாவை சிறப்பிக்க உள்ளேன். அரசியல்வாதிகள், ஆன்மீக வியாபாரிகளுக்கு இணையாக எனக்கு கட் அவுட்கள் பேனர்கள் வைப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக “வருங்காலப் பிரதமரே வருக வருக” என போஸ்டர் அடித்து ஒட்டுவதைத் தவிர்க்கவும். எனக்கு புகழ்ச்சி பிடிக்காது. இது வரை ரசிகர் மன்றம் அமைக்க வந்த 154685478521458 சொச்சம் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளேன். மேலும் நான் சென்னை வரவில்லை என்றால் தீக்குளித்துவிடுவதாக அச்சுறுத்தி மெயில் அனுப்பிய 143 இளம்பெண் வாசகிகளுக்கும் என் அன்புகள். வெறும் பெயரையும் ஊரையும் மட்டும் போட்டு அந்த மின்னஞ்சல்களை எல்லாம் வெளியிடுவதில் விருப்பம் இல்லை. அவர்களின் மெயில் முகவரிகளுடன் விரைவில் வெளியிடுகிறேன். ஏனெனில் இப்போதைக்கு 143 மெயில் ஐடிகள் உருவாக்க நேரம் இல்லை என்பதை என் ஏழரை நாட்டு வாசகர்கள் புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

Read more...

புட்டன் தாத்தன்

புட்டன் தாத்தன் ஒசரம் கம்மியா இருப்பார். அதனால எல்லாம் மரியாத கொறஞ்சதில்ல. மத்த பெரியவங்க மாரியே அவரும் எனக்கு வாங்க போங்க தாத்தன் தான். பெரியவங்கள வா போன்னு பேசினா ஊட்ல எம்முதுகு பழுத்துடும். எந்தாத்தனோட தம்பிமார்ல ஒருத்தர் ஊட்ல தான் இருந்தார். அவர் வேல ஆடு மேக்கிறது மட்டுந்தான். எங்கிட்ட ரொம்ப பாசமா இருப்பார். பொன்வண்டு, காரப்பழம் எல்லாம் கொண்டு வந்துத் தருவார். தினமும் சாய்ங்க்யாலம் ஆடு அடைக்கிற நேரத்துக்கு பட்டிக்குப் போய்டுவேன்.நாலு பக்கமும் தடுப்புச் சுவர் மாதிரி மூங்கில் படல்களால் இருக்கும் அமைப்பு தான் பட்டி.

தினமும் காலைல நாலு, அஞ்சி மணிக்கெல்லாம் அவருக்கான நாள் ஆரம்பிச்சிடும். ஆடுகளுக்குப் பாதுகாப்பா தினமும் இரவு பட்டியில தான் தங்குவார். ஆள் இலைனா ஆட்டுத் திருடனுங்க ஆட்டையப் போட்ருவானுங்க. காத்தால எழுந்ததும் பட்டித் திருப்பறது தான் மொத வேல. தினம் பட்டித் திருப்பியாவனும். ஆட்டு புளுக்கை தான் இருப்பதிலேயே நல்ல இயற்கை உரம்னு சொல்வாங்க. அதனால ஆட்டுப் பட்டிய விவசாய நிலங்கள்ல தான் போடுவாங்க. பட்டித் திருப்பறதுன்னா ஒரு இடத்துல இருந்து அதுக்கு அடுத்த இடத்துல மாத்தறது தான். நிலத்தை செஸ் கட்டங்கள் மாதிரி யோசிச்சிக்கோங்க. ஒரு கட்டத்துல இருக்கிற பட்டிய அடுத்தடுத்த கட்டங்களுக்கு தினமும் மாத்தனும்.சில சமயங்கள்ல பக்கம் பக்கமே நெறய பேர் பட்டிக் கட்டி இருப்பாங்க.

பக்கத்துல எதும் விவசாயம் இல்லாம இருந்தா ஒருத்தரே பட்டித் திருப்ப முடியும். ஆடுங்களும் எங்கயும் போகாது.  யாராச்சும் பண்ணயம் பண்ணி இருந்தாங்கன்னா ஆடுகள் அதை மேயாம தடுக்க ஒருத்தர் வேணும். இத தான் தினமும் மொத வேலயா புட்டன் தாத்தன் செய்வார். மொதல்ல , படல்களுக்கு முட்டுக் குடுத்து கட்டி இருக்கும் L மாதிரி இருக்கும் கட்டைகளில் ஒண்ணை எடுத்து பட்டி திருப்ப வேண்டிய எடத்துல வைப்பார். அப்புறம் அந்த பக்கத்து படல்களை மட்டும் பிரிச்சி எடுத்துட்டுப் போய் அந்த கட்டைல கட்டுவார். இதே மாதிரி நாலு பக்கமும் செய்வார். அப்புறம் கொடாப்புஅக் கொண்டு போய் பட்டுக்குள்ள வைப்பார். பட்டியில் ஆடுகள் தான் அடைக்கனும். குட்டிகளை அடைக்க பெரிய அண்டாவை கவுத்து வச்ச மாதிரி சில குச்சிகளை வளைத்து செய்த கொடாப்புல தான் அடைக்கனும். அதுல மேல் பக்கத்துல ஒரு கயிறுகட்டி அந்தக் கயித்துல குட்டிகள் சாப்பிடும் இலைகளை கட்டி வச்சிடுவார். குட்டிகள் மட்டும் சென்று வரும் அளவு குட்டியா கொடாப்புல ஒரு கதவும் இருக்கும்.

பட்டியும் கொடாப்பும் மாத்தினதும் அவர் படுக்கிறதுக்காக இருக்கும் பட்டிக் குடிசையை பட்டுக்கு உள்ளயோ வெளியவோ வச்சிடுவார்.  இதெல்லாம் முடியறதுக்குள்ள கருக்கல் மறய ஆரம்பிச்சி இருக்கும். நேரா ஊட்டுக்கு வந்துடுவார். பட்டிக்காட்ல எல்லாரும் நாலு அஞ்சி மணிக்கெல்லாம் முழுச்சிருவாங்க. புட்டன் தாத்தன் வரும் போது அவங்க ஊட்ல சோளக் கூழ ரெடியா இருக்கும். கைகால் கழுவிட்டு வந்து சுடச் சுட கூழ் குடிப்பார். அப்டியே கொஞ்ச நேரம் அக்கம் பக்கம் கத பேசுவார். நல்லா வெளிச்சம் வந்துரும். குட்டிகளுக்கு தழ ஒடிச்சினு வர கிளம்பிடுவார்.

தேவையான அளவு தழைங்க சேர்ந்ததும் நேரா பட்டிக்குப் போய் குட்டிகளுக்கு கொடாப்புல தழ கட்டிட்டு குட்டிகளை வெளிய எடுத்து அதுங்க அம்மாங்க கிட்ட பால் குடிக்க வச்சி மறுபடியும் கொடாப்புல அடைச்சிட்டு ஊட்டுக்கு வருவார். பல்லு வெளக்கி பக்கத்துல எங்கனா தொட்டியில குளிச்சிட்டு காத்தால சாப்பாட்டுக்கு ரெடி ஆய்டுவார். சாம சோறோ வரகு சோறோ இருக்கும். கொள்ளு பருப்பு கொழம்பு ஊத்தி வயிறு முட்ட ஒரு கட்டு கட்டிட்டு அப்டியே எங்கனா போய்ட்டு 11 மணிவாக்குல மறுபடியும் பட்டிக்குப் போய்டுவார். போகும் போது ஒரு தூக்குல கூழ் ஊத்தி எடுத்துப்பார். மத்யான சாப்பாட்டுக்கு. தண்ணி எங்கனா கெடைக்கும். இல்லைனா அது ஒரு பாட்டில்ல எடுத்துப்பார்.


ஆடு மேக்கிற எல்லாருமே அந்த நேரத்துல தான் கிளம்புவாங்க. காட்டுக்கு ஆடு ஓட்டிட்டுப் போற வழியில எல்லாரும் ஒண்ணு சேர்ந்துடுவாங்க. அப்டியே காட்டுக்குப் போய் ஆடுகளைமேய விட்டுட்டு ஆளுக்கொரு மரத்தடில தூக்கம் போட ஆரம்பிச்சிடுவாங்க. யார்னா ஒருத்தர் ரெண்டு பேர் மட்டும் முழிச்சிட்டு ஆடுகள பார்த்துப்பாங்க. பெரும்பாலும் தூக்கத்த விட கதை அடிக்கிறது தான் அதிகமா இருக்கும். ஒரே எடத்துலன்னு இல்லாம பச்ச இருக்கிற எடமெல்லாம் சுத்தி சுத்தி மேய்ப்பாங்க.

இருட்ட ஆரம்பிக்கிற மாதிரி ஆய்டிசின்னா எல்லாரும் ஆடுக்கள ஓட்டிட்டு திரும்புவாங்க. யார்னா ஒருத்தர் ஆடுகளுக்கு முன்னாடி வருவார். மத்தவங்க ஆடுகளுக்கு பின்னாடியும் பக்கவாட்டுலையும் வருவாங்க.இல்லைனா கூட்டத்துல இருக்கிற எதுனா குறும்பாடு அது இஷ்டத்துக்கு எங்கனா போகும். அது பின்னாடியே மத்த ஆடுங்க போகும். வழியில் இருக்கிற பண்ணயத்துல ஆடுங்க வாய் வசிடக் கூடாதே. அது பெரிய கலவரத்தை உண்டு பண்ணிடும். எப்போவும் யார் தோள்ளயாச்சும் 2 ஆட்டுக் குட்டிகள் இருக்கும். ஆடுகள் ஒரு நேரத்துல 2 குட்டிப் போடும்.

புட்டன் தாத்தன் பட்டிக்கு வந்ததும் அவரு ஆடுகள் மடும் தனியா பட்டிய பார்த்து ஓட ஆரம்பிச்சிடும். ஆடுங்க வரது தெரிஞ்சதும் கொடாப்புல இருக்கிற குட்டிங்க எல்லாம் கத்த ஆரம்பிச்சிடும். புட்டன் தாத்தன் ஒரு படலை மட்டும் கொஞ்சமா திறந்து விடுவார். அது மட்டும் தான் திறக்கற மாதிரி இருக்கும். மத்த படல் எதும் திறக்க முடியாத மாதிரி கட்டி இருப்பாங்க. பட்டியில இருக்கிற தொட்டியில மத்யானம் தண்ணி நெரப்பி வச்சிருப்பாங்க. ஆடுங்க அதை குடிச்சி தாகம் தீர்த்துக்கும். எல்லா ஆடுங்களும் பட்டிக்குள்ள போனதும் பட்டியை அடைச்சிடுவார். அப்புறம் குட்டிகளை திறந்து விட்ருவார். அவங்கவங்க அம்மாகிட்ட போய் சமத்தா பால் குடிச்சிட்டு செமத்தியா ஆட்டம் போட ஆரம்பிச்சிடும். அப்புறம் குட்டிகளை பிடிச்சி கொடாப்புல அடைச்சிட்டு ராத்திரி சாப்பாட்டுக்கு ஊட்டுக்கு வருவார். களியோட கீரைக் குழம்போ அவரைப் பருப்பு குழம்போ சமைச்சி வச்சிருப்பாங்க. சாப்ட்டுட்டு ஒரு பேட்டரி லைட்டும் மூங்கில் தடியும் போர்வையும் எடுத்துக்கு திரும்ப பட்டிக்கு போய்டுவார். போகும் போதே செட்டு செட்டா தான் போவாங்க. அவங்கவங்க பட்டிக்குப் போனதும் பட்டி குடிசைல படுத்துடுவாங்க. அதுல உயரமான கால்களோட ஒரு கட்டில் இருக்கும். வைக்கோல் போட்டு அதுக்கு மேல சாக்குப் பை மூடி இருக்கும். மெத்து மெத்துனு இருக்கும் மெத்தை மாதிரி. குளிர் அல்லது வெக்கைக்கு ஏத்த மாதிரி கட்டிலுக்கு மெல இருக்கிற குடிச்சை மூடாப்பை உயரமவோ தாழ்வாவோ வச்சிக்குவார். அன்றையநாள் முடிந்தது. அடுத்த காலைல நாலு அஞ்சி மணிக்கு எழுந்துடுவார்...

பெரியவனாகற வரைக்குமே தெரியாது அவர் ஆடு மேய்க்கவே எந்த தாத்தமூட்டுக்கு வந்தார்ன்னும் அவர் எங்க தாத்தனுங்களுக்கு சொந்தம் இல்லைனும். ஆனாலும் கடைசி வரை எங்களுக்கு தாத்தனாவே இருந்தார். ஒருநாள் ஊருக்குப் போனப்போ புட்டன் தாத்தன் பட்டியில இருந்த தாடிக்கார ஆடு வேற ஒருத்தர் ஓட்டிட்டுப் போனார். வாங்கிட்டியான்னு கேட்டதுக்கு, புட்டன் கெழவன் செத்ததும் உங்க தாத்தமூட்டார் இத வித்துட்டாங்கன்னு சொன்னான். என்னவோ மாதிரி இருந்துச்சி..எதயாச்சும் திண்ணுட்டு வயித்தால போச்சின்னா ஒடு டம்பரும் எலுமுச்சம் பழமும் எடுத்துட்டு பட்டிப்புப் போய்டுவேன். ஆட்டுப் பால் கறந்து அதுல எலுமிச்சம் பழம் சாறு பிழிஞ்சித் தருவார். கொஞ்ச நேரத்துல சரி ஆய்டும். அவர் செத்துப் போய்ட்டார்னு கேட்டதுல இருந்து மீள ஆட்டுப்பாலும் உதவாது..




Read more...

ரீமா டார்லிங்கின் ஆயிரத்தில் ஒருவன் - வரலாறு முக்கியம் பதிவரே

ஒருவழி/லியாய் ஆயிரத்தில் ஒருவன் பார்த்தே விட்டேன். மின்னலே படத்தில் மட்டும் தான் ரீமா அழகாய் இருந்தார் என நினைத்திருந்தேன். ஆஒவின் ஆரம்பக் காட்சியில் ரீமாஆஆஆஆஆ.. அட அட என்ன அழகு.. என்ன அழகு.. என்னை ஏதோ செய்துவிட்டாள்.. ஆண்ட்ரியாவுடன் ஆரம்பத்தில் தோழமையுடன் பேசும் போதே அழகிலும் முக பாவனைகளிலும் கலக்குகுறார். அகழ்வாராய்ச்சி அணியை வழிநடத்தும் போதும் கப்பலில் கார்த்தி படுக்கைக்கு அழைக்கும் போதும் மிக அழகான திமிரை முகத்தில் கொண்டுவருகிறார்.

பாடல்காட்சிகளில் ஆக்ரோஷமான ஆட்டமாகட்டும் இடுப்பை வளைத்து நெளித்து நளினமாக ஆடுவதாகட்டும்.. அப்படியே நம்மை கொஞ்சம் கொஞ்சமாக தின்றுவிடுகிறார். அடி கள்ளி.. இவ்வளவு திறமைகளை எங்கேயடி ஒளித்து வைத்திருந்தாய் எனக் கேட்கத் தோன்றுகிறது. இதோடு திரும்பிப் போய்டலாம் என சொல்லும் கார்த்தியை , நீ பொட்டையாடா எனக் கேட்டு உசுப்பேத்தும் போது அந்த ஏளனம் வேறு யாருக்கும் வரமா என்று தெரியவில்லை. துப்பாக்கியை எடுத்து , தன்னை தாக்க வரும் காட்டுவாசிகளையும் பின்னர் பாம்புகளை சுடும் போது செய்யும் சாகசங்களையும் பார்க்கும் போது இந்தியாவின் ஏஞ்செலினா ஜூலியாய் ஜொலித்தார்.. டாம் ரைடர் மாதிரி பாம்ப் ரைடராக ரீமாவால் கலக்க முடியும்.

துப்பாக்கிக் குண்டு தீர்ந்ததும் கார்த்தியின் முதுகில் ஏறிக்கொண்டு காட்டும் பயமும் அபபவித்தனமும் சராசரிப் பெண்ணுக்கே உரியது.. சபாஷ் செல்லமே.. தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தனி முத்திரைப் பதிக்கிறார் ரீமா. சோழர்கள்(?) கிராமத்தைக் கண்டுபிடித்ததை விடியோ கேமராவில் பதிவு செய்யும் போது ஒரு குழந்தையைப் போன்று பேசுகிறார்.. பார்த்திபன் அண்ட் கோவின் நம்பிக்கையைப் பெற்று தனி அறையில் அவருக்கு செய்தி(ஹிஹி) சொல்லும் போது தன்னைவிட அழகான பெண்ணைக் காட்டுங்கள் பார்க்கலாம் என சவால் விடுகிறார். இன்னும் இன்னும் ரீமாவைப் பற்றி சொல்ல ஆயிரம் ஆயிரம் இருந்தாலும் இப்போதைக்கு இது போதும்.

ஆண்ட்ரியா பாவம்.. என்ன செய்வதென்றே தெரியாமல் வருகிறார்.. ரீமா பின்னிப் பெடலெடுக்கும் போது இவர் தேமேவென்று தெரிகிறார். குளிரில் நடுங்கும் போது கார்த்தியை கட்டிப் பிடிக்கும் ஒரு காட்ச்சிகாக இந்த அழகுப் பெண்ணை வீணடித்திருக்கிறார் செல்வராகவன். ஆனால் பாடல்கள் எல்லாம் அழகாய்ப் பாடி இருக்கிறார். மயக்கும் குரல். மற்ற இசை அமைப்பாளர்களும் பயன்படுத்தலாம். உன் மேல ஆச தான் பாடலில் அழகாய் ஆடவும் செய்கிறார்.ஆனாலும் ரசிக்கும்படி பெரிதாய் ஒன்றும் இல்லை..

படத்தை பலரும் நார் நாராய்க் கிழித்துத் தொங்கப் போட்டுவிட்டதாம் பெரிதாய் சொல்ல எதுவும் இல்லை என்றாலும் வரலாறு முக்கியாயிற்றே. இவன் ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் எழுதவே இல்லை என்று சொல்லி வருங்கால வலையுலகம் ஒதுக்கிவிடக் கூடாது பாருங்க. முதல் பாதி மிகச் சிறப்பாகவே இருக்கிறது. விரு விரு சுறு சுறு.. ஓவ்வொரு காட்சியும் அடுத்த காட்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. இடைவேளையுடனே படம் முடிந்துவிடுகிறது. ஆனாலும் எதற்கு அதற்குப் பிறகான கட்சிகள் என்றுத் தெரியவில்லை. இடைவேளைக்குப் பிறகு, எவனுக்காச்சும் தைரியம் இருந்தா இது போன்ற ஒரு கேவலமான படத்தை எடுத்துக் காட்டுங்கள் என பேரரசு வகையறாக்களுக்கு சவால் விட்டிருக்கிறார் செல்வராகவன். லாஜிக், சோழர், அடிமைகள் , புண்ணாக்குப் , பொடலங்காய் என எதுவும் பார்த்து நான் சொல்லவில்லை. ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரத்தம் ரத்தம் ரத்தம். இது ஃபேண்டசி என்று சொல்லப் பட்டதால் ஒரு பிரமாண்டமான வரலாற்றுக் கார்ட்டூன் படம் பார்க்கப் போகும் மனநிலையில் தான் சென்றேன். ஆனால் அபப்டி எல்லாம் ஒரு ம....ண்ணும் இல்லை.

முதல்பாதி படத்தை நிச்சயம் பார்க்கலாம். இரண்டாவது பாதியை பார்க்காமல் இருப்பது உங்கள் பாவச் செயல் எண்ணிகையில் ஒன்று கூடாமல் இருக்க உதவலாம். சிலரின் பாசிட்டிவான விமர்சனத்தைப் படித்து விட்டு , இந்தப் படத்தை கிழித்து தொங்கப் போட்டவர்களிடம் படத்திற்கு ஆதரவாய்ப் பேசியது எவ்வளவு பெரிய அபத்தம் எனப் புரிகிறது.சிலர் சொன்னதைப் போல், இதில் புரியாத கதை என்றெல்லாம் ஒன்றும் இல்லை. புரியாத அளவுக்கு சிக்கலாம கதை எல்லாம் இல்லை. மிக எளிமையாகதான் இருக்கு.

பாண்டியர்களுடனான போரில் தோல்வியுற்ற சோழர்கள், பாண்டியர்களின் குலதெய்வம் சிலையை எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறார்கள். அதை கைப்பற்ற பாண்டியர்கள் வந்து விடக் கூடாது என சாமர்த்தியமான 7 ஆபத்துகளை விட்டுச் செல்கிறார்கள். அதைத்தாண்டி யாரும் சென்றதில்லை போல. ரீமா சென், கார்த்தி, ஆண்ட்ரியா குழுவினர் 7 தடைகளையும் கடந்து அந்த இடத்தை அடைந்துவிடுகிறார்கள். சோழர்கள் வரைந்து வைத்திருக்கும் ஓவியத்தின் படி கார்த்தி, அங்கு வந்து சோழ வாரிசை காக்க வேண்டியவர்.  பாண்டியர்களில் மிஞ்சிய 8 பேரில் ஒருவர் தான் ரீமா சென். அவர் சோழர் இடத்திற்கு செல்வதே குல தெய்வத்தின் சிலையைக் கைப்பற்றி சோழர்களை பழிவாங்கத்தான். சோழர்களுக்காக கார்த்தி போரிடுகிறார். ரீமா, ராணுவத்தின் உதவியுடன் சோ கால்ட் சோழர்களை பிடித்து ஒரு முகாமில் அடிமைகளாக வைக்கிறார். இதில் இருந்து தப்பிக்கும் கார்த்தி, சோழர்களின் வாரிசை தோலில் சுமந்தபடி செல்கிறார். சோழர்களின் பயணம் தொடரும் என்பதோடு படம் முடிகிறது. இதில் புரியாமல் போக என்ன எழவு இருக்கு?


டிஸ்கி: நமீதாவுக்கு மட்டுமே இடம் அளித்த என் இதயக் கோயிலில் இனி ரீமா மட்டுமே குடி இருப்பார் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கிறேன்.

Read more...
Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP