September 30, 2010

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா - யாசின் பதான்


அயோத்தி தீர்ப்பு விவகாரம் என்னாச்சுன்னு என் டி டிவி பார்க்கும்போது கிடைச்ச வீடியோ


யாசின் பதான் வங்காளத்தில் உள்ள ஒரு கிராமத்தச் சேர்ந்தவர். 1971 லிருந்து சுற்று வட்டாரத்திலுள்ள ஏறத்தாழ 34 புராதன கோயில்களைப் பராமரித்து வருகிறார். 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்களாம். தன்னுடைய கிராமத்திலுள்ள இந்து மற்றும் முஸ்லிம் மக்களை புராதன கோயில்களைப் பாதுகாப்பதில் ஈடுபட முன்னோடியாய் இருக்கிறார், முக்கியமாக ஒன்றிணைந்து செயல்பட வைப்பதில். 1994- ல் மதநல்லிணக்கினத்திற்கான கபீர் விருது பெற்றுள்ளார்.இருதய நோய்க்கு சிகிச்சைக்கு செலவு செய்ய பணமில்லாமலிருந்த போதும், கோயில்கள் பராமரிப்பைத் தொடர்ந்து செய்து வருகிறார் ( கிராம மக்கள் இவர் சிகிச்சைக்கு உதவவில்லையா என தெரியவில்லை)



இவரது முயற்சியால் இந்திய தொல் பொருள் துறை இக்கோயில்களைப் பராமரிக்க 4 1/2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. நாடு முழுவதும் இவரைப் போல மத நல்லிணக்கத்திற்க்கு பாடுபடும் நல்லவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், எல்லா மதங்களிலும். ஆகாவளிகள் பற்றிய செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்து இவரைப் போன்றவர்கள் பற்றிய செய்திகள் பொது ஜன ஊடகங்களில் பரவலாக வருவது தொடர்ந்தா நல்லாத்த்தான் இருக்கும் :))

பழைமையையும், மத நல்லிணக்கத்தையும் ஒரே செயலின் மூலம் பாதுகாக்கும் யாசின் பதான் வாழ்க வளமுடன் நோய் நொடியின்றி

September 29, 2010

பர்சேஸ் போறீங்களா.. கொஞ்சம் பார்த்து போங்க.

தை திண்ணா பித்தம் தெளியும்னு சொல்ற மாதிரி, என்ன பண்ணா இப்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கலாம் என யோசிக்க வேண்டியதாகிவிட்டது. இந்தக் கட்டுரையில் பர்சேஸ் போகிறவர்களுக்கு சின்ன ஆலோசனை. வீட்டு உபயோகப் பொருட்கள் துறையில் எனது நேரடி அனுபவமே இந்த கட்டுரை.

பொதுவாக ஒரு பொருள் வாங்க செல்பவர்கள் ஒரே கடையில் விசாரித்து வாங்கி விடுகிறார்கள். சோம்பேறித்தனமும் பணத்தின் அருமை தெரியாததுமே இதற்கு காரணம். இனியும் அவ்வாறு செய்யாதீர்கள். சில நூறு ரூபாய் அளவில் உள்ள பொருட்கள் என்றால் பரவாயில்லை. 10, 20 ரூபாய்கள் வித்தியாசம் தான் இருக்கும். ஆனால் ஆயிரங்களில் வாங்கும், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, ஹோம் தியேட்டர், ஃபர்னிச்சர்கள் போன்ற பொருட்களை வாங்கும் போது ஒரே கடையில் விசாரித்து வாங்கும் பழக்கத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

எதாவது ஒரு கடைக்கு சென்று உங்களுக்கு பிடித்த மாடலை தேர்வு செய்துக் கொண்டு அதற்கான விலையை கேட்டுக் கொள்ளுங்கள். “ நாங்கள் வேறு கடையிலும் விலையை விசாரிக்க விரும்புகிறோம். உங்களை விட குறைவாக இருந்தால் அங்கேயே வாங்கிவிடுவோம். அலல்து நீங்கள் அதைவிட குறைவான விலையில் அல்லது அதே விலையில் கொடுக்க முன்வந்தால் உங்களிடமே வாங்கிக் கொள்கிறோம்” என கண்ணியமாக சொல்லிவிட்டே (இப்படி சொல்லும் போதே அவர்கள் ஓரளவு நியாயமான விலையை சொல்லிவிடுவார்கள்) அல்லது வேறு காரணங்களை சொல்லிவிட்டு வேறு கடைக்கு சென்று விசாரியுங்கள். குறைந்தது 4 கடைகளிலாவது விசாரியுங்கள். அப்போது தான் உண்மை விலை என்னவென்று தெரியும்.

தவறாமல் பெட்டியில் இருக்கும் அதிகபட்ச விலையை (MRP) பார்த்துக் கொள்ளுங்கள். அதை அழித்திருந்தால் வாங்க வேண்டாம். மதிப்புக் கூட்டு வரி (VAT) அமுல்படுத்திய பிறகு பொருட்களின் அடக்க விலைக்கும் அதிகபட்ச விலைக்குமான வேறுபாடு பெரிய அளவில் குறைந்துவிட்டது. அதில் இருந்து சில சதவீதம் கழித்து வாங்கினாலே அது சரியான விலையாகத் தான் இருக்கும்.

தவணை முறையில் வாங்க விரும்பினால் குறைந்தது 3 நிதி நிறுவங்களின் சேவை பற்றியாவது விசாரியுங்கள். நீங்கள் பொருள் வாங்கும் கடையிலேயே அதற்கான ஆட்கள் இருப்பார்கள். அவர்களிடம் வட்டி விகிதம், டாகுமெண்ட் சார்ஜ் போன்றவற்றை விசாரித்து, எந்த நிறுவனம் நமக்கு சரியாக இருக்கும் என தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.

அதிக விலை உள்ள பொருட்களை இணையத் தளங்கள் மூலம் வாங்குவதை தவிர்க்கவும். அவர்கள் பெரும்பாலும் அதிகபட்ச விலையில் தான் விற்பனை செய்கிறார்கள். செல்போன், கேமரா போன்றவற்றின் விலையை இணையத் தளங்களில் தெரிந்துக் கொண்டு அருகில் இருக்கும் கடைகளில் வாங்குங்கள். இவைகளை பொறுத்தவரையில் இணையத் தளங்களில் தான் ஓரளவு சரியான விலை இருக்கும்.

ஆன்லைனில் வாங்குவதில் சில அசெளகரியங்கள் உள்ளன. வாங்கிய பொருள் சரியாக எப்போது கிடைக்கும் என சொல்ல முடியாது. குறைந்தது 7 நட்கள் ஆகும். Transport Damage இருந்தால் அதை மாற்றுவது கஷ்டம்.

இணையத் தளத்தில் பார்த்த தோற்றத்திலேயே அந்த பொருள் இருக்கும் என்பதை சொல்ல முடியாது. ஷிப்பிங் சார்ஜ் ஃப்ரீ என்று சொல்லிவிட்டு பொருளை டெலிவரி செய்யும் நிறுவனம் நம்மிடம் காசு வாங்க வாய்ப்பிருக்கு. நாம் முன்பே பொருளுக்கான விலையை கிரெடிட் கார்ட் மூலம் கட்டி இருப்போம். ஆகவே இப்போது சில நூறு ரூபாய்க்காக பொருளை வேண்டாம் என சொல்ல முடியாது. தேவை இல்லாத மன உளைச்சலும் செலவும் ஏற்படும். சமீபத்தில் கூட ஒரு நண்பருக்கு இந்த பிரச்சனை வந்தது.

எந்தப் பொருளை வாங்கினாலும் அருகில் இருக்கும் கடைகளிலேயே வாங்குங்கள். அப்போது தான் வாங்கிய பொருளை எடுத்து செல்வதற்கான செலவு குறையும். அதைவிட முக்கியம், சர்வீஸ் வசதி. ஏதேனும் பழுதடைந்தால் அந்த நிறுவனத்தின் சர்வீஸ் செண்டருக்கு நீங்களே நேரடியாக அழைப்பதைவிட, அந்தப் பொருளை வாங்கிய கடையிலேயே பழுதைப் பற்றி சொல்லி உங்கள் விலாசம் கொடுத்து விட்டால், அவர்கள் இன்னும் விரைவான சேவைக்கு ஏற்பாடு செய்வார்கள். இதற்கு, அருகில் இருக்கும் கடைகளில் வாங்குவது தான் சிறந்தது.

Exclusive Showroomகளில் பொருட்களை வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கவும். அங்கு வேறு நிறுவனப் பொருட்கள் இருக்காது என்பதால் குறைவான அளவிலேயே வியாபாரம் நடக்கும். ஆகவே சிக்கிய வாடிக்கையாளர்களிடம் தாழித்து விடுவார்கள். அவர்களிடம் விலை விசாரித்துவிட்டு வேறு கடைக்கு வந்து விசாரித்து பாருங்க. பெரிய வித்தியாசம் இருக்கும்.

இந்த ஆலோசனைகளை என் நண்பர்கள் பலருக்கும் சொல்லி இருக்கிறேன். இதன் மூலம் பல நூறு ரூபாய்களில் இருந்து சில ஆயிரங்கள் வரை மிச்சப்படுத்தி இருக்கிறார்கள்.நீங்களும் முயற்சி செய்யுங்கள். சம்பாதிக்கும் பணத்தை சரியாக செலவளியுங்கள்.

ஹிஹி.. மீள்பதிவு  ( தட்ஸ்தமிழ்.காம் தளத்திற்காக சென்ற ஆண்டு எழுதியது. )

September 23, 2010

185 ரூபாய்க்கு இணையதளம் - ப்ளாக் பெயர் மாற்றம் - மொபைலில் தமிழ் - ஆள விடுங்க சாமிகளா

முஸ்கி : நானும் ப்ளாக் வச்சிருக்கேன் என காட்டவே இந்த சும்மா பதிவு.. இது யாருக்கும் தெரியாத புத்தம் புது தகவல் எல்லாம் இல்லை.. ஆனாலும் குறைந்த பட்சம் 2 பேருக்காவது புதியதாக இருக்கலாம்..
[ என்ன கமெண்ட் வரும்னு தான் தெரியுமே ]
 சியில் கிடைத்ததே என ஒரு டாட் காம் வைத்திருக்கும் என்னை மாதிரி ஆட்களும் உண்டு.. தனக்கென்று ஒரு சொந்த இணைதளம் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைக்கும் சரக்குள்ள பதிவர்களும் உண்டு.. இரண்டா வகையினருக்கான ஒரு சின்ன தகவல். Name.com இணையதளம் 185 ரூபாய்க்கு .in இணைய பெயரை வழங்குகிறது. கூடவே ஒரு கண்ட்ரோல் பேனலும். www.pathivar.blogspot.com  என்று இருக்கும் வலைப்பூவை www.pathivar.in  என்ற இணையதளமாக மாற்றும் வழி முறைகள்,

  • Name.com சென்று உங்களுக்கு வேண்டிய பெயர் அவைலபிளா என செக் பண்ணிடுங்க.
  • உங்கள் .in பெயர் இருந்தால் அதை விலைக்கு வாங்கிவிடுங்கள். அதற்கு கட்டணம் 185 ரூபாய் மட்டுமே. வேறு எந்தக் கட்டணமும் இல்லை.
  • பின்னர் உங்களுக்காக Blogger.comல் ஒரு வலைப்பூ உறுவாக்குங்கள். அதன் Setting பகுதியில் Publishing என்ற பிரிவில் என்பதை Custom Domain க்ளிக்குங்க.
  •  அதில் Already own a domain? Switch to advanced settings என்பதை க்ளிக்குங்க.
  • Your Domain என்ற கட்டத்தில் உங்கள் .in ( ex : www.pathivar.in ) முகவரியை குடுத்துடுங்க. பின்னர் சேவ் செய்திடுங்க. இங்கே வேலை முடிந்தது.
  • அப்படியே மீண்டும் Name.com லாகின் செய்ங்க. Account போங்க. அதில் பட்டியலிடப்பட்டிருக்கும் உங்கள் .in முகவரியை க்ளிக் பண்ணுங்க. எற்கனவே அதில் இருக்கும் Name Server முகவரிகளை( ns1.name.com, ns2.name.com, ns3.name.com , ns4.name.com) அழிச்சிடுங்க.
  • இப்போ கூகுள் ப்ளாகரின் ghs.google.com என்ற முகவரியை மட்டும் சேர்த்துடுங்க. அம்புட்டு தான்.. உங்கள் .in இணையதளம் ரெடியோ ரெடி. எஞ்சாய்.
  • புதிய மற்றும் பழைய  ப்ளாகுகளை .in முகவரிக்கு மாற்ற இதே வழி முறை தான். .in ற்கு பதில் .com. .net , .org  என எல்லா முகவரிகளுக்கும் இந்த வழிமுறையை பின்பற்றலாம்.
  • Name.com விட குறைவான கட்டணத்தில் .in முகவரி அளிக்கும் தளம் இருந்தாலும் பயன்படுத்தலாம்.
-------------------------------------------------------------------------------

 டுத்தது.... நீங்கள் தற்போது வைத்திருக்கும் ப்ளாகர் பெயர்( url) பிடிக்கவில்லை அல்லது வேறு காரணங்களுக்காக மாற்ற வேண்டும் என நினைத்தால், பழைய பதிவுகளுக்கு எந்த சேதாரமும் இன்றி புதிய பெயராக ( url ) மாற்றிக் கொள்ளலாம்.
  • Bloggerல் லாகின் செய்துகொண்டு Setting பகுதியில் இருக்கும் Publishing பிரிவுக்கு போங்க.
  • அங்கே Blogspot Address என்ற கட்டத்தில் பழைய பெயரை நீக்கிவிட்டு புதிய பெயரை ( அவைலபிலாக இருந்தால் ) டைப் பண்ணுங்க. சேவ் பண்ணிடுங்க. மேட்டர் ஓவர். 
  • உங்கள் பழைய பதிவுகளுக்கு எந்த சேதாரமும் இருக்காது.
  • உங்கள் பதிவுக்கு யாராவது சுட்டி கொடுத்திருந்தால் அவை இனி பயன்படாது. அவர்களிடம் சொல்லி புதிய URL கொடுக்க சொல்லிடுங்க. மறக்காமல் எல்லாருக்கும் புதிய பெயரை சொல்லி ரீடர்களில் Subscribe  பண்ண சொல்லிடுங்க.
-------------------------------------------------------------------------------

ட்டக்கடைசியாக.... இப்போ அலைபேசியில்.. அதாங்க மொபைல் போனுன்னு சொல்வாங்களே.. அதுல வலை மேய்வது அதிகரித்து வருகிறது. அதில் தமிழ் எழுத்துகள் படிக்க சிலர் மிக சிரமப்படறாங்க. அவங்களுக்கு மட்டும் இது. இணையத்தில் தேடினால் 1000 கணக்கான பதில்கள் வரும். ஆனாலும் நம்ம மக்கள்ஸ் அது செய்ய மாட்டேன்றாங்க.. பொழச்சிப் போகட்டும்.. அவ்வளாவோ சமூக சேவை செய்றோம்.. இதும் செஞ்சிடுவோம்..
  • முதலில் உங்க போனில் Opera Mini இன்ஸ்டால் செஞ்சிடுங்க.
  • பின்னர் போனில் Opera Mini திறந்து Address Barல் ( டாஸ்மாக் பார் இல்ல ) இருக்கும் ( இருந்தால்) www நீக்கிவிட்டு config: என டைப் செய்ங்க.
  • இப்போது தோன்றும் பக்கத்தில் கடைசி பகுதிக்கு வாங்க.. அதில் Use bitmap font for complex script என இருக்கும். அதன் இறுதியில் இருக்கும் கட்டத்தில் No என்பதற்கு பதில் Yes என்பதை தேர்வு செய்ங்க. 
  • இப்போ அந்த பக்கத்தை சேவ் செஞ்சிடுங்க. முகப்புக்கு வந்துடுங்க. இனி தமிழ் எழுத்துகள் தெரியும்.

டுத்து, கூகுள்.காம் எப்டி போறதுன்னு சொல்லித் தரேன்..  நோ.. நோ.. அழக் கூடாது.. இதெல்லாம் ஒரு சோசிலு சர்வீசு.. நாமல்லாம் பொறந்ததே பொது சேவை செய்யத்தானே பாஸ்.. :)

September 1, 2010

அட்றா சக்க அட்றா சக்க - அமீரு சாரு சத்தியராஜிகாரு

ழம், ஈழத்தமிழர் என்ற வார்த்தைகளைக் கேட்டாலே நம்மூர் போலித் தமிழ் ஒணர்வாளர்கள் பொங்கிடுவாங்க. மூச்சுத் திணறத் திணற பேசுவாங்க. உடல் பொருள் ஆவி (ஆனந்த விகடன் இல்லை.) எல்லாம் தமிழருக்கே என்பார்கள். பேசி முடிச்ச அடுத்த நொடி புரட்சி வெடிக்கும் என்று நினைக்கும் அளவு ஒணர்ச்சி வசப்படுவாங்க. வைகோ, திருமாவளவன், ராமதாஸ் மற்றும் நம்ம குபீர் ஈழத்தாய் எல்லாம் சில நெருக்கடிகளில் வாழ்பவர்கள். அவர்கள் நிலை நமக்கு நன்றாகவேத் தெரியும். ஏ(ஓ)ட்டுச் சுரைக்காய்கள்.

அவங்களுக்கு அடுத்து ஈழம் என்றால் உயிரை விடத்துடிப்பவர்களாக காட்டிக் கொள்பவர்கள் நம்ம கலை உலக கண்மணிகள் தான். இவங்களுக்கு சினிமால நடிக்க வருதோ இல்லையோ மேடையும் மைக்கும் கிடைச்சா அவ்ளோ தான். அடடா.. எத்தனை ஆஸ்கர் விருது தந்தாலும் போதாது. அம்புட்டு நடிப்பைக் கொட்டு கேக்கறவங்களையும் பாக்கறவங்களையும் திக்குமுக்காட வச்சிடுவாங்க. அதுல முக்கியமானவங்க சீமான், பாரதிராஜா, சத்தியராஜ் மற்றும் அமீரு.

சிறைக்கு போனதும் அய்யோ என்னால இந்த மாதிரி சிறைல எல்லாம் இருக்க முடியாது. நான் சொகுசுப் போராளி என்று மொதல் வகுப்புக் கேட்டுப் போராடினாலும் கூட, சிறைக்கு செல்வோம் என்று தெரிந்தும் பேசுகிறார் என்பதால் அவரை பாராட்டலாம். பாரதிராஜா பாவம். அவர் காலைல கர்ஜித்துவிட்டு மாலையில் கோபாலபுரத்தில் கோயிந்தா கோயிந்தா என்று பூஜை புணஷ்காரம் செய்து பரிகாரம் தேடிக் கொண்டார். அவரும் பாவம்.. பொழைச்சிப் போகட்டும்.

அடுத்து அமீரு சாரும் சத்தியராஜிகாரும். இவங்க அலப்பறையத் தாங்கவே முடியாது. சமீபத்திய விகடன் பேட்டியிலையே அமீரு சாரு எம்மாம் பெரிய டகால்ட்டி பார்ட்டின்னு காண்பிச்சிட்டாரு. ஆனாலும் அதை அடுத்த கனமே மறந்துட்டு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உதார் விட்டுட்டுத் திரியறார். இந்த இரண்டு மாபெரும் பிழைப்புவாதிகளும் ( எல்லாம் கொம்யூனிச சகவாசம் தான்) மீண்டும் வாயெலலம் பல்லாய் இளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓவர் டூ ஜூனியர்விகடன்..

அமீரு சாரு பேசறாரு ...
 
”எல்லோர் பேச்சையும் பொறுமையாகக் கேட்ட அமீர், ''விழாவுக்கு வர்றதுக்கு முன்பே 'தயவுசெய்து பேசச் சொல்லிடாதீங்க'ன்னு விழா அழைப்பாளர்கள்கிட்டே ஒரு மணி நேரம் என்னோட குமுறலை எல்லாம் கொட்டிட்டுத்தான் வந்தேன்.”

( பின்ன, தனியா பேசினாத்தானே ஜெயிலுக்குப் போகாம இன்னும் நெறைய மசாலா படம் புடிச்சி காசு பார்க்கலாம்)

”அதை இப்போ இங்கே பேசினா, நாளைக்கு நான் வெளியே இருக்கவே முடியாது.
( ஏன், நாளைக்கு எதும் ஷூட்டிங் இருக்கா? இப்போ தான் சார் ஹீரோ வேற ஆய்ட்டிங்க.. கால்ஷீட் ப்ராப்ளம் ஆகிடும்ல உள்ள போனா )

'முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் ஒரு நாள் கலந்துகொண்டதைத் தவிர வேறு என்ன செய்தோம்?' (ஏன் எதும் செய்யல) என்ற ஒரு குற்ற உணர்வு எனக்கும் இன்னும் இருக்கு.
( இருந்து? தொப்புள் கொடி உறவுகளுக்காக எதுவும் செய்ய முடியாததால் தமிழனாக இருக்கவே வெட்கப் படுகிறேன் என கோரஸ் பாடிய பதிவர்கள் ஆஃப் ஆய்ட்டாங்க. இப்போ உங்க முறையா பாஸ்.. ஹ்ம்ம் நடத்துங்க. )

60 வருஷமா அடுக்குத் தமிழில் பேசிப் பேசியே ஆட்சியிலும் உட்கார்ந்துவிட்டார்கள். அதெல்லாம் முடிஞ்சுபோன பழைய கதை. அதனால் நாமாவது அறிவுப்பூர்வமாகப் பேசுவோம். அவரவருக்கு என்ன முடியுமோ, அதை நம் இனத்துக்காகச் செய்வோம். அதையும் தாண்டி அரசியலால்தான், போராட்டத்தால்தான் வென்றெடுக்க முடியும் என்ற நிலை வந்தால்... அதையும் செய்வோம்!'' என்றார் வேகமாக
( முடியல.. அடிக்கிறாரு பாருய்யா ஸ்டண்டு )
 
சத்தியராஜிகாரு..( நடிச்ச பெரும்பாலான படங்களில் தன்னை கவுண்டனாகவே காட்டிக் கொண்ட தீவிர சாதி மறுப்பாளர். பெரியாரின் ஒரே தொண்டர்.) பேசறாரு..


”உண்மையைச் சொல்லணும்னா... நான் வசதியான குடும்பத்தில் பிறந்து, சொகுசா வாழ்ந்து பழக்கப்பட்டவன். அதனால் எனக்கு சிறைக்குப் போகத் தைரியம் கிடையாது.”
( நல்லா பாருங்க மக்களே.. மகாத்மா காந்தி, நேதாஜி, நேரு, பெரியார் எல்லாம் வறுமைல வாழ்ந்தவங்களாம். அதனால தான் தைரியமா ஜெயிலுக்குப் போனாங்களாம். சொல்றது யாருன்னாங்க்ணா , பெரியார் பெயரை சொல்லி ஊரை ஏமாற்றும் கவுண்டனுங்க்ணா )

”சிறைக்குச் செல்லும் தைரியம் என் தம்பி செந்தமிழன் சீமானுக்குத்தான் உண்டு.”
( அதும் மொதோ வகுப்பு சிறைக்கு )

”என் மனதில் உள்ள கோபத்தை எல்லாம் இங்கே நான் பேசிக் கொட்டினால், ஆயுளுக்கும் வெளியே வர முடியாது. அப்புறம் 'இரண்டு முகம்'தான் எனது கடைசிப் படம் ஆகிடும்!''
( அட்றா சக்க அட்றா சக்க.. ஆக, நம்ம கவலை எல்லாம் இன்னும் எவ்ளோ படம் புடிக்கனும்.. கட்டிபுடிச்சி ஆடனும்.. காசு பார்க்கனும் என்பது தான்.. அப்புறம் என்னத்துக்குங்க்ணா மேடையிம் மைக்கும் கெடைச்சா பொளந்துக் கட்றிங்க.. சும்மா டமாசு..? கேக்கறவன் எல்லாம் கேணையனுங்கன்னு நெனப்பு..? )

டிஸ்கி: ஆமாமா இவங்கள பத்தி யாருக்கும் தெரியாது.. இவன் புதுசா கண்டுபிடிசிட்டான் என்னும் நல்ல உள்ளங்களுக்கு.. ”யாரடி நீ மோகினியில் தனுஷ் சொல்லும், அய்யோ மேடம் ஆஸ்த்ரேலியா.. ஆஸ்த்ரேலியாவா ? நான் பார்த்த்..பார்த்த..பார்த்ததே இல்லை” என்னும் ரீதியில் அய்யோ சத்யராஜ், அய்யோ அமீரு, அய்யோ சீமாரு என்று உருகுபவர்களுக்காக மட்டுமே இந்த பதிவு
TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget