January 1, 2012

கொண்டாடுங்க வேணாங்கல.. ஆனால்..

 
ப்போதும் கொண்டாட்ட மனநிலையில் சந்தோஷமாக இருப்பது நல்லது தான். ஆனால் கொண்டாட்டங்கள் பிறருக்கு இம்சையைக் கூட்டுவதாகவோ, கூட்டுவதற்காகவோ இருக்கக் கூடாது. நேற்று உடல் நலமின்மையால் 10 மணிக்கு முன்பே உறங்கிவிட்டேன். அதற்கு முன்பே வெடிச்சத்தங்கள் ஆங்காங்கே கேட்டுக் கொண்டுதானிருந்தது. இரவு சுமார் 12 மணி வாக்கில் பயங்கர கூச்சல். 20 முதல் 30 பேர் இருந்திருக்கனும். அதில் பாதிப் பேராவது சிறுவர்களாக இருப்பார்கள். புத்தாண்டைக் கொண்டாட வேண்டுமானால் இப்படி மிருகங்களைப் போல் கத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பதை எங்கு கற்றுக் கொண்டார்கள் எனத் தெரியவில்லை. இதில் சிறுவர்கள் இளைஞர்கள் என அனைவருக்கும் குடி பழக்கம் வேறு..

காட்டுக் கூச்சலைத் தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் ஏராளமான பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள், முதியோருக்கு இது எவ்வளவு பாதிப்பு என்பதை ஏன் புரிந்துக் கொள்வதில்லை. எதோ இது எங்கள் தெருவில் மட்டும் நடந்த தொந்தரவு இல்லை. புத்தாண்டு இரவு நேரத்தில் பாதுகாப்பாக சாலையில் பயணிப்பது அவ்வளவு எளிதல்ல. சாலையில் செல்வோரை குடி போதையில் என்ன செய்கிறோம் என்றே புரியாமல் தொல்லைக் கொடுக்கும் கொண்டாட்டக் குடிகாரர்களின் தொல்லைக்கு அளவே இருக்காது.

நேற்று மாலை சினிமாவுக்கு சென்றுவிட்டு மனைவியுடன் பைக்கில் வந்த என் நண்பர் ஒருவர், உயிரைக் கையில்ப் பிடித்துக் கொண்டு வந்தேன் என்று சொன்னார். வாகனத்தில் கும்பல் கும்பலாக வந்து புந்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்த குடிகாரப் பயலுக சாலையில் குறுக்கும் நெடுக்கும் வண்டிகளை ஓட்டி பிறரை அச்சுறுத்துக் கொண்டிருந்தார்களாம். திடீர் திடீரென கைகளை நீட்டி கத்திக் கொண்டு பயமுறுத்தி இருக்கிறார்கள்.

இப்படிப் பிறரை அச்சுறுத்தி எல்லாம் என்ன புண்ணாக்குக் கொண்டாட்டங்கள் வேண்டி கெடக்கு? நட்ச்சத்திர விடுதிகளில் தடுப்பு சுவர்களுக்குள் கொண்டாடுபவர்களால் ஒரு பிரச்சனையும் இல்லை. குடி போதையில் சாலைகளில் பொறுக்கித் தனம் செய்பவர்களால் சாதாரன மக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் கேடு விளைகிறது. காந்தி ஜெயந்தி போன்று புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களிலும் அரசாங்க சாராயக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். ஆனால், சாராயம் விற்று தான் ஆட்சி நடத்த முடியும் என்ற நிலைக்கு தள்ளப் பட்டிருக்கும் ஒரு மாநிலத்தில் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.

0 comments:

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget